பெங்களூரு

பிரபல நடிகை தமன்னா ஒரு நிறுவனத்தின் விளம்பர தூதராக நியமிக்கப்பட்டதை கன்னடர்கள் எதிர்த்து வருகின்றனர்.

 

பிரபல நடிகை தமன்னா தமிழ் மட்டுமின்றி, இந்தி, தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் நடித்து வருகிறார்.  அவருக்கு இந்தியா முழுவதிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்

இந்நிலையில் மைசூரு சோப்பு மற்றும் டிடர்ஜென்ட் நிறுவனத்தின் விளம்பர தூதராக நடிகை தமன்னா நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு இதற்காக ரூ.6.20 கோடி சம்பளம் வழங்கப்பட்டு 2 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

கன்னடர்கள் தமன்னா நியமனத்திற்கு எதிராக வேறு மொழி நடிகைக்கு பதிலாக கன்னட நடிகை ஒருவரை விளம்பர தூதராக நியமிக்க வேண்டும் எனவும் கர்நாடக அரசு தனது முடிவை மாற்ற வேண்டும் எனவும் தெரிவித்து வருகின்றனர். இதனால் கர்நாடக அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.