கர்நாடகா மாநிலம் முழுவதும் கடந்த ஒரு வாரமாக தொடர் மழை பெய்து வருகிறது.

மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ஞாயிறு முதல் கனமழை பெய்து வருவதால் பருவமழை போன்ற சூழல் நிலவியது.

பெங்களூரில் ஞாயிறு அன்று தொடங்கிய கனமழை செவ்வாய் கிழமை வரை நீடித்ததில் நகரின் பல இடங்கள் வெள்ள நீரில் மூழ்கியது.

மைசூரு, குடகு, ஹாசன், சிக்மகளூர், மங்களூரு, கலபுரகி ஆகிய மாவட்டங்களில் நேற்றும் இடைவிடாது மழை கொட்டியது.

இதில், கலபுரகி மற்றும் தார்வாட் மாவட்டங்களில் இடி மின்னல் தாக்கியதில் 5 பேர் உயிரிழந்தனர்.

கர்நாடகா முழுவதும் அடுத்த சில நாட்களுக்கு மழை தொடரும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.