ர்மபுரி

ர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் ஒகேனகல்லுக்கு நீர் வரத்து 8000 கன அடியாக அதிகரித்துள்ளது.

கடந்த இரு தினங்களாக கர்நாடகா காவிரி நீர்ப்பிடிப்பு பகுதி மற்றும் கர்நாடகா மாநிலம், மைசூர், மாண்டியா மாவட்டங்கள், சாம்ராஜ் நகர் ஆகிய பகுதிகளில் விடிய விடிய கனமழை பெய்துள்ளது. எனவே தருமபுரி மாவ ட்டம், ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.

கர்நா டகா, தமிழக காவிரி நீர்ப்பி டிப்பு பகுதிகளான அஞ் செட்டி, கேரட்டி, நாட்றாம் பாளையம், ராசிமணல், பிலிகுண்டுலு, ஒகேனக்கல் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்துள்ளது.  இதனால் நேற்று மாலை 5 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை நிலவரப்படி 8 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளதால் காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

இவ்வாறு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் ஒகேனக்கல் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ், ஐவர்பாணி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.  ஆகவே சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் பரிசல் பயணம் மேற்கொண்டு காவிரி ஆற்றின் அழகை ரசித்ததுடன் தொங்கு பாலத்தில் நின்று காவிரி ஆற்றில் விழும் தண்ணீரை ஆர்வமுடன் ரசித்து மகிழ்ந்தனர்.