சென்னை: கல்லூரி மாணவியை ஏமாற்றிய திமுக இளைஞரணி நிர்வாகி தெய்வச்செயல் மீது திமுக அரசு மற்றும் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கா விட்ல், அதிமுக மிகப்பெரிய போராட்டங்களை முன்னெடுக்கும்” என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி! தெரிவித்துள்ளார்.
திமுக இளைஞரணி நிர்வாகி தெய்வசெயல், `பல பெண்களை ஏமாற்றியிருக்கிறான்; திருமண மோசடி, பல பெண்களுடன் தொடர்பு, உடல் முழுவதும் கடித்து சித்ரவதை, கொலை மிரட்டல் என தி.மு.க இளைஞரணி நிர்வாகி தெய்வச்செயல் மீது பாதிக்கப்பட்ட மாணவி அடுக்கடுக்கான புகார்களை தெரிவித்துள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மாணவியின் புகாரின் பேரில் தெய்வசெயல்மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என எதிர்கட்சிகள் குரல் கொடுத்து வருகின்றன. இந்த நிலையில், தெய்வசெயல்மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என அதிமுக அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் திமுக இளைஞரணி நிர்வாகி தெய்வச்செயல் என்பவன் கல்லூரி மாணவியை ஏமாற்றி பிற திமுக “சார்”களுக்கு இரையாக்க முயற்சித்ததாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
இந்த வழக்கில் எப்ஐஆர் பதிய அலைக்கழித்த காவல்துறை, அரக்கோணம் தொகுதி கழக சட்டமன்ற உறுப்பினர் சு. இரவியிடம் மாணவி முறையிட்ட பிறகே எப்ஐஆர் பதிந்துள்ளது. மேலும், தன்னைப் போன்றே “20 வயதுள்ள 20 பெண்கள்” தெய்வச்செயலின் கொடூரப் பிடியில் சிக்கியுள்ளதாக அந்த மாணவி தெரிவித்துள்ளார்.
“பொள்ளாச்சி பொள்ளாச்சி” என்று மேடைதோறும் கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் -பொள்ளாச்சி வழக்கிற்கும் இந்த வழக்கிற்கும் என்ன வித்தியாசம் தெரியுமா? பொள்ளாச்சி வழக்கை நான் நேர்மையாக சிபிஐ-க்கு மாற்றினேன்; நீங்களோ, அரக்கோணம் வழக்கை நீர்த்துப் போக எல்லா வேலைகளையும் செய்துகொண்டு இருக்கிறீர்கள்!
பாதிக்கப்பட்ட பெண் தெளிவாக “உங்கள் நண்பர் பெற்றெடுத்த பிள்ளை” அமைச்சர் அன்பில் மகேஸ் உள்ளிட்ட திமுக-வினர் பெயரைச் சொல்லி, தான் மிரட்டப்படுவதாக சொல்கிறார். குறிப்பாக, அமைச்சர் அன்பில் மகேஷ் பி.ஏ.உமா மகேஸ்வரன் என்பவருக்கு தன்னை இரையாக்க முயற்சித்ததாக அந்த மாணவி கூறுகிறார். பாதிக்கப்பட்ட மாணவி சொல்வதை வைத்தே கேட்கிறேன்.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் திமுக இளைஞரணி நிர்வாகி தெய்வச்செயல் என்பவன் கல்லூரி மாணவியை ஏமாற்றி பிற திமுக “சார்”களுக்கு இரையாக்க முயற்சித்ததாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
இந்த வழக்கில் FIR பதிய அலைக்கழித்த ஸ்டாலின் மாடல் அரசின் காவல்துறை, அரக்கோணம் தொகுதி திமுக குற்றவாளிகள் அடங்கிய கூடாரத்தைப் பாதுகாக்க முயற்சிக்கும் ‘சார்’கள். 20 வயது பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தத் துடிக்கும் திமுக நிர்வாகி(கள்) மீது அரசு நடவடிக்கை எடுக்குமா? எடுக்காவிடில், மக்கள் துணையோடு நிச்சயம் அதிமுக மிகப்பெரிய போராட்டங்களை முன்னெடுக்கும்”.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, அரக்கோணம் பகுதி திமுக பிரமுகர் தெய்வசெயல் என்பவர் தன்னை ஏமாற்றி தாலி கட்டி, அரசியல் பிரமுகர்களுக்கு இரையாக்க முயற்சி செய்வதாக கல்லூரி மாணவி குற்றம்சாட்டி உள்ளதுடன், அவர்மீது நடவடிக்கை எடுக்காததால், அதிமுக எம்எல்ஏவின் உதவியை நாடி இருப்பது ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் பகுதியை சேர்ந்த 21 வயது மாணவி அதேப்பகுதி கல்லூரி ஒன்றில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். அவர் கடந்த 10 ஆம் தேதி அரக்கோணம் பகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிறந்த நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அதிமுகவை சேர்ந்த அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினர் ரவி கலந்து கொண்டார். அப்போது சட்டமன்ற உறுப்பினர் ரவியை கல்லூரி மாணவி நடுரோட்டில் சந்தித்து தனக்கு உரிய நீதி பெற்றுத் தர வேண்டும் என, கண்ணீர் மல்க கோரிக்கை மனுவை அளித்தார்.
அந்த மனுவில், ”அரக்கோணம் அடுத்த காவனூர் பகுதியைச் சேர்ந்த தெய்வசாயல் என்பவர் திமுகவில் ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளராக பதவி வகித்து வருகிறார்.
அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆன நிலையில் என்னை காதலிப்பதாக ஏமாற்றி கடந்த ஜனவரி மாதம் 31 ஆம் தேதி சோளிங்கர் கரிக்கல் கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டார். கடந்த மார்ச் மாதம் வரை சுமூகமாக சென்ற வாழ்க்கையில் திடீரென தெய்வச்சாயல் திமுக முக்கிய பிரமுகர்களுக்கு என்னை இரையாக்க முயற்சித்தார்.
இச்செயலுக்கு நான் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தினந்தோறும் என்னை கடுமையாக தாக்கினார். இதையடுத்து கடந்த ஏப்ரல் மாதம் 5 ஆம் தேதி தெய்வசாயல் கொடுமைகளை தாங்கிக் கொள்ள முடியாமல் நான் தற்கொலைக்கு முயற்சி செய்தேன். உறவினர்கள் என்னை மீட்டு முதலில் அரக்கோணம் அரசு மருத்துவமனையிலும் மற்றும் அதனை தொடர்ந்து திருவள்ளூர் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்றேன்.
மேலும் தற்கொலை முயற்சி குறித்து காவல் துறையினர் எவ்வித விசாரணை மேற்கொள்ளவில்லை. இதை தொடர்ந்து நான் அவருடன் செல்லவில்லை என்றால் என்னுடைய பெற்றோர்களை வாகனம் ஏற்றி கொலை செய்து விடுவதாக மிரட்டி அழைத்துச் சென்றார்.
அங்கு எனக்கு கொடுமைகள் அரங்கேறியதால் என்னால் தாங்கிக் கொள்ள முடியாமல், நிரந்தரமாக எனது தாய் வீட்டிற்கு வந்து என்னுடைய கல்லூரி படிப்பை மீண்டும் தொடர்ந்து வருகிறேன். இருப்பினும் தெய்வ சாயல் என்னை விடாமல் தொடர்ந்து தொல்லை செய்து வருகிறார்.
இதுகுறித்து அரக்கோணம் நகர காவல் நிலையத்திற்கு புகாரளிக்க சென்றபோது, ‘இது எங்களுடைய எல்லை இல்லை’ என திருப்பி அனுப்பி விட்டனர். இதை தொடர்ந்து அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு சென்றபோது ஆய்வாளர் காவல் நிலையத்தில் இல்லாத காரணத்தினால் அரக்கோணம் தாலுகா காவல் நிலையத்திற்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டேன்.
அரக்கோணம் நகர காவல் நிலையத்திலும் நான் அலைக்கழிக்கப்பட்டதால் நேரடியாக ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை நாடினேன். அங்கு புகார் மனு பெறப்பட்டு மீண்டும் அரக்கோணம் டிஎஸ்பி அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டேன். இதுபோன்று தொடர்ந்து புகார் மனு பெறாமல் என்னை அலைக்கழித்து வருகின்றனர்.” என்று கூறி அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினர் ரவியை சந்தித்து தனக்கு நீதி பெற்று தர வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
மேலும் திமுக பின்புலம் கொண்ட நபர் மீது நடவடிக்கை மேற்கொள்ள காவல் துறையினர் தயக்கம் காட்டி வருவதால் தனக்கு ஆதரவாக இருக்கும்படி அதிமுக சட்டமன்ற உறுப்பினரை வேண்டிக் கொண்டார். இதை தொடர்ந்து மாணவியின் புகார் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு நீதி கிடைக்கும் வரை ஆதரவாக இருப்பதாக அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினர் ரவி உறுதியளித்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே கல்லூரி மாணவி அளித்த புகாரின் கீழ் அரக்கோணம் அனைத்து மகளிர் காவல் நிலையம் சார்பில் தெய்வசாயல் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.