சென்னை:  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று ரூ. 457 கோடி மதிப்பீட்டில் காவலர் குடியிருப்புகள் மற்றும் சிறைச்சாலை கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

செனையில் இன்று நடைபெற்ற நிகர்ச்சயில்,  காவல்துறை சார்பில் கட்டப்படவுள்ள 1,118 காவலர் குடியிருப்புகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினர். மேலும்,  சென்னை ஆயிரம் விளக்கு மற்றும் கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் ரூ.457 கோடியே 14 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட உள்ள 1,118 காவலர் குடியிருப்புகளுக்கு காணொளி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.

இதனை தொடர்ந்து கோவை மாவட்டம் புறநகர் பகுதி பிளிச்சியில் 211 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட உள்ள கோவை மத்திய சிறைச்சாலை (பகுதி 1) கட்டிடங்களுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

இந்த நிகழ்ச்சியில் தலைமைச்செயலாளர், உள்துறை செயலாளர், டிஜிபி உள்பட முக்கிய அதிகாரிகள் கலந்துகொண்டனர்.