சென்னை:  சாத்தான்குளம் அருகே கார் சாலையோரம் உள்ள கிணற்றுக்குள் பாய்ந்த விவகாரத்தை தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் சாலைகளின் ஓரங்களில் உள்ள பாதுகாப்பு இல்லாத இடங்களை ஆய்வு செய்ய  மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார்.

சாத்தான்குளம் அருகே கிணற்றுக்குள் கார் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் குழந்தை உட்பட 5 பேர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர். 3 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். நேற்ற மாலை 4 மணியளவில் இந்த சம்பவம் நடைபெற்றது.   சாத்தான்குளம் அருகே சிந்தாமணிக்கும் மீரான்குளத்துக்கும் இடையே கார் சென்று கொண்டிருந்தது. கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் வலதுபுறம் இருந்த தடுப்புச்சுவர் இல்லாத கிணற்றுக்குள் பாய்ந்தது. அந்த ஆம்னி வேனில் பயணித்த எட்டு பேரில் 3 பேர் வெளியேறிய நிலையில் மற்ற 5 பேர் உயிரிழந்தனர்.  கிணற்றில் ஆம்னி வேன் பாய்ந்த விபத்தில் 5 பேர் பலியான நிகழ்வு அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விபத்து குறித்து கேள்விப்பட்ட முதல்வர் மு.க ஸ்டாலின், தான் மிகுந்த அதிர்ச்சி அடைந்ததாகவும், வேதனை அடைந்ததாகவும் தெரிவித்தார். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி,  சாத்தான்குளம் அருகே கிணற்றில் கார் விழுந்ததில் உயிரிழந்த 5 பேரின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் உத்தரவு அளித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே கிணற்றில் கார் விழுந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்த 5 பேரது குடும்பத்தினருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.3 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க உத்தரவு அளித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் சாலைகளின் ஓரங்களில் உள்ள கிணறுகள் மற்றும் பள்ளங்கள் உள்ளிட்ட பாதுகாப்பு இல்லாத இடங்களை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவு அளித்துள்ளார்.