திருவண்ணாமலை: அதிமுக ஆட்சியின்போது அறநிலையத்துறை அமைச்சராக இருந்தவர் சேவூர் ராமச்சந்திரன். இவரது விட்டில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் இன்று காலை முதல் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி தொகுதி எம்.எல்.ஏ.வான சேவூர் எஸ். ராமச்சந்திரன் வீட்டில் சுமார் 20-க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், சோதனை நடத்தி வருகின்றனர். அவரது மகன்களான விஜய்குமார் மற்றும் சந்தோஷ்குமார் ஆகியோரது வீடுகளிலும் சோதனை நடைபெற்று வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சேவூர் ராமச்சந்திரன், அதிமுக ஆட்சியின்போது, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சராக (2016 – 2021) பதவி வகித்தவர். தற்போது ஆரணி தொகுதி எம்எல்ஏவாக இருந்து வருகிறார் சேவூர் ராமச்சந்திரன், இவர் கடந்த அட்சியில், 200 கோடி ரூபாய்க்கும் அதிகமான சொத்து சேர்த்ததாக கூறி இந்த ரெயிடு நடக்கிறது..