சென்னை; தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்ட 4 நிதித்துறை மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்கினார்.

தமிழக சட்டப்பேரவை கடந்த மார்ச் 14 ஆம்  தொடங்கி நடைபெற்றது. அன்றைய தினம் தேதி நிதிநிலை அறிக்கையும், அடுத்த நாளான மார்ச் 15ந்தேதி  வேளாண்மை நிதிநிலை அறிக்கைகள்  தாக்கல் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து பட்ஜெட்கள்மீது பொது விவாதங்கள் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து,  நீர்வளம், இயற்கை வளங்கள் துறைகள், ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை உள்பட அனைத்து  துறைகளின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதமும் வாக்கெடுப்பும் நடைபெற்றது.  இடையிடையே முதலமைச்சர் ஸ்டாலின் விதி 110ன் கீழ் பல்வேறு அறிவிப்புகளையும் வெளியிட்டார்.

அதுபோல,   காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் மானியக் கோரிக்கை மீதான விவாதங்களுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் பதிலளித்து புதிய அறிவிப்புகளை வெளி யிட்டார். தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத் துறை மானியக் கோரிக்கைகள்  என அடுத்தடுத்து, தொடர்ந்து,  36 நாள்கள் அவை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, ஏப்ரல் 29ந்தேதியுன் தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெ கூட்டத் தொடர் நிறைவு பெற்றது. தமிழ்நாடு சட்டப்பேரவை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்படுவதாக பேரவைத் தலைவர் அப்பாவு அறிவித்தார்.

இந்த கூட்டத்தொடரில், நிதித்துறை மசோதா உள்பட 18 மசோதாக்கள் விவாதிக்கப்பட்டு, வாக்கெடுப்புடன் நிறைவேற்றப்பட்டன. பின்னர் இந்த மசோதாக்களை சபாநாயகர் அப்பாவு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்தார்.

இந்த நிலையில், நிதியமைச்சர்  தங்கம் தென்னரசு தாக்கல் செய்திருந்த தமிழக அரசின் நிதி நிலை அறிக்கை தொடர்பான 4 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.   மீது  14 மசோதாக்கள் ஆளுநரின் ஆய்வில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.