சென்னை: பிரபல பல்கலைக்கழகமான சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுஉள்ளது. இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சமீபகாலமலாக தமிழ்நாட்டின் கல்விநிறுவனங்கள் உள்பட பல முக்கிய பகுதிகளுக்கு அடுத்தடுத்து வெடிகுண்டு மிரட்டல் இ.மெயில் வந்துகொண்டிருக்கிறது. இதன் காரணமாக காவல்துறை விழிப்புடன் செயலாற்றி வருகிறது. சைபர் கிரைம் சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்த நிலையில்,  தமிழ்நாட்டின் பிரபலமான பல்கலைக்கழகமான கிண்டி அண்ணா பல்கலைக் கழகத்திற்கு  வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதாக கூறப்படுகிறது.  இதுபோன்று ஏற்கனவே  18 முறை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள நிலையில், இன்று 19வது முறையாக மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது.

எப்போதும் போல, இ-மெயில் மூலம் வந்த வெடிகுண்டு மிரட்டலால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மிரட்டலை தொடர்ந்து கோட்டூர்புரம் போலீசார் மோப்பநாய் உதவியுடன் அண்ணா பல்கலைக் கழகத்தில் சோதனை செய்ததில் மிரட்டல் புரளி என தெரியவந்தது.   இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.