கதிர்காமம்
இலங்கையில் நடந்த பேருந்து விபத்தில் 21 பேர் உயிரிழந்துள்ளனர்/

இன்று அதிகாலை பேருந்து ஒன்று இலங்கையில் கதிர்காமம் பகுதியில் இருந்து குருநாகல் நோக்கி சென்றுள்ளது. அப்போது நுவ ரெலியா- கம்பளை மலைப்பகுதி சாலையில் சென்று கொண்டிருந்த போது பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.
விபத்தில் பேருந்தில் பயணம் செய்தவர்களில் 21 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 20 க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பேருந்தில் சுமார் 75 பயணிகள் இருந்ததாகவும், அனைவரும் புத்த மத துறவிகள் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
விபத்தில், உயிரிழந்த 21 பேரின் உடல்களும் கொத்மலை பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் கொத்மலை பொது வைத்தியசாலை, நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலை, கம்பளை மற்றும் நாவலப்பிட்டி ஆகிய வைத்தியசாலைகளிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
[youtube-feed feed=1]