ஸ்ரீநகர்,

ந்தியா பாகிஸ்தான் இடையே ஏற்பட்டுள்ள போர் நிறுத்தம் அமலானதா என உமர் அப்துல்லா வினா எழுப்பி உள்ளார்.

கடந்த 4 நாட்களாக இந்தியா, பாகிஸ்தான் இடையே எல்லையில் உச்ச கட்ட பதற்றம் ஏற்பட்டு இந்தியாவும் தக்க பதிலடியை மூர்க்கமாக கொடுத்தது. இந்த தாக்குதலில் பாகிஸ்தானில் உள்ள ரபிகுய், முரிட் சக்லலா, ராம்கியார் கான், சுக்குர், சுனியன் உள்பட 8 ராணுவ நிலைகளை இந்திய ராணுவம் தாக்கியது. எனவே பாகிஸ்தான் பணிந்தது.

இவ்வாறு மோதல் ஒருபக்கம் நடந்து வந்த நேரத்தில் பாகிஸ்தானின் ராணுவ உயர் அதிகாரிகள், இந்திய ராணுவ உயர் அதிகாரிகளுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்த முன்வந்தனர். இதில் சில முன்னேற்றங்கள் ஏற்பட்டதால், அதுபற்றிய தகவல் பிரதமர் மோடிக்கு தெரிவிக்கப்பட்கு அவர் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படை தளபதிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இருநாட்டு முக்கிய அதிகாரிகளும் தொலைபேசியில் தொடர்ந்து பேசிய்ச்தையடுத்து நேற்று மாலை 5 மணியளவில் போர் நிறுத்தம் அமலுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது.

ஆனால், போர் நிறுத்தத்தை மீறி பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி உள்ளது. அதிலும் குறிப்பாக ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப் பகுதிகளில் டிரோன், ஏவுகணைகள் மூலம் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வருகிறது. எனவே காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா உண்மையாகவே போர் நிருத்தம் அமலானதா என வினா எழுப்பி தனது எக்ஸ் தளத்தில் போர் நிறுத்தம் அமலாகவில்லை என பதிந்துள்ளார்.