சென்னை
இந்திய ராணுவத்தின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை விமர்சித்த சென்னை பேராசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக இந்திய ராணுவம் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பதிலடி தாக்குதல் நடத்தியது. இதில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்டு வந்த 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன.
செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரி பகுதியில் உள்ள பிரபல தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றி வரும் லோரா என்பவர், சமூக வலைத்தளங்களில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்து தவறாக விமர்சிக்கும் வகையில் கருத்து பதிவிட்டதாக தெரிகிறது.
லோராவி பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. எனவே இந்திய ராணுவத்தை விமர்சித்து கருத்து தெரிவித்ததற்காக லோரா பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கல்லூரி நிர்வாகம் பேராசிரியை லோராவை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.