சென்னை

சென்னை சாந்தோம் சாலையில்  மீண்டும் இரு வழி போக்குவரத்து நடைமுறைப் படுத்தப்;படுகிறது.

நேற்று சென்னை போக்குவரத்து காவல்துறையினர்,

”கார்ணீஸ்வரர் கோவில் தெரு, சாந்தோம் நெடுஞ்சாலையில் சென்னை மெட்ரோ ரெயில் பணி காரணமாக ஒரு வழிப்போக்குவரத்து முறையானது கடந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்டது.

தற்போது, சாந்தோம் நெடுஞ்சாலையில் ஒரு பகுதியில் மெட்ரோ ரெயில் பணிகள் முடிந்த நிலையில், நெரிசல் இல்லாத நேரங்களில், இன்று (வெள்ளிக்கிழமை) முதல் சந்தோம் நெடுஞ்சாலை மற்றும் லூப் சாலையில் மீண்டும் இருவழிப் போக்குவரத்து நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

நெரிசல் மிகுந்த நேரங்களான காலை 7.30 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் ஒரு வழிப்போக்குவரத்து வழக்கம்போல் தொடரும்.”

என அறிவித்துள்ளனர்.