பொலிவியா நாட்டில் தனி நபருக்குச் சொந்தமான சிறிய ரக விமானம் ஒன்று விபத்தில் சிக்கி உப்பங்கழியில் விழுந்ததில் முதலைகளிடம் சிக்கினர்.

விமான விபத்தில் இருந்து தப்பி அந்த சதுப்பு நிலப்பகுதியில் இருந்த ஏரியில் விமானம் விழுந்ததை அடுத்து அவர்களுக்கு உண்மையான சோதனை தொடங்கியது.

பொலிவிய கிராமமான பௌரெஸிலிருந்து கடந்த புதன்கிழமை சிறிய விமானம் புறப்பட்டது, அது தெற்கே உள்ள பெரிய நகரமான டிரினிடாட்டை நோக்கிச் சென்றது.

பாட்ரிசியா கோரியா குவாரி தனது சகோதரரின் ஆறு வயது மகனுக்கு குழந்தை மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்ய தனது சகோதரர் மற்றும் அண்டை வேட்டைச் சேர்ந்த இருவர் என மொத்தம் 5 பேருடன் அந்த விமானத்தில் சென்றுள்ளார்.

ஆறுகள் நிறைந்த அமேசான் காடுகளில் நெடுந்தூரம் பயணிக்க இதுபோன்ற சிறிய ரக விமானங்கள் ஒரு பொதுவான போக்குவரத்து வடிவமாகும்.

ஆனால், விமானம் புறப்பட்ட 27 நிமிடங்களில் – கிட்டத்தட்ட பாதியிலேயே – அதன் ஒரே இயந்திரம் துண்டிக்கப்பட்டது.

இதுகுறித்து அவர்கள் உடனடியாக வணிகரீதியல்லாத ஒரு சிறிய வானொலி மூலம் சக ஊழியர் ஒருவருக்கு விபத்து குறித்து தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து தரையில் மோதிய அந்த விமானம் பின்னர் ஏரியில் தூக்கி வீசப்பட்டுள்ளது.

இதில் அந்த விமானம் நீரில் மூழ்கிய நிலையில் அந்த ஏரியில் மத்திய மற்றும் தென் அமெரிக்காவை பூர்வீகமாகக் கொண்ட முதலை குடும்பத்தைச் சேர்ந்த கெய்மன் கூறப்படும் முதலைகள் இருப்பதை உணர்ந்தனர்.

தவிர, அந்த காட்டுப்பகுதியில் அனகோண்டா போன்ற கொடிய விஷ பாம்புகள் இருப்பதை அடுத்து விமானத்தின் மேற்கூரையில் தஞ்சமடைந்த அவர்கள் உதவிக்கு யாரும் இல்லாமல் பீதியடைந்தனர்.

தொடர்ந்து அவ்வழியாக பறந்து சென்ற விமானங்கள் மற்றும் படகுகளுக்கு சைகை செய்தும் யாரும் கவனிக்காததால் பலன் கிடைக்கவில்லை.

சுமார் 36 மணி நேரம் கழிந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அவ்வழியாக சென்ற மீன்பிடி படகில் இருந்த சிலர் இவர்களைப் பார்த்துள்ளனர்.

முதலைகள் மற்றும் அனகோண்டா பாம்புகள் வசிக்கும் அந்த அடர்ந்த காட்டுப்பகுதியில் இரண்டு இரவுகள் உயிரை கையில் பிடித்து இருந்த அவர்களுக்கு நம்பிக்கை ஏற்பட்ட நிலையில் அந்த படகில் இருந்தவர்கள் இவர்களை மீட்டு கரையில் சேர்த்ததுடன் மீட்பு விமானத்திற்கு தகவல் கொடுத்து அவர்களை வழியனுப்பியுள்ளனர்.

பொலிவியா நாட்டில் நடைபெற்ற இந்த சம்பவம் சமூக வலைத்தளங்கள் மூலமாக வைரலாக பரவி வருகிறது.