சென்னை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உடல்நலம் பாதிப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

மதிமுக தலைவர் வைகோ நேற்று வீட்டில் கீழே விழுந்து அடிபட்ட நிலையில்  சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

ஏற்கனவே வைகோ கடந்த ஆண்டும், இதுபோல வீட்டில் வழுக்கி விழுந்து காயமடைந்தார். அப்போது அவருக்கு   அறுவை சிகிச்சை நடைபெற்றது. இந்த நிலையில், தற்போது மீண்டும் தனது  சென்னை சாலிகிராமத்தில்  உள்ள  வீட்டில் கீழே விழுந்து அடிபட்ட நிலையில் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் .  அவரது உடல்நலம் சீராக இருப்பதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.