புதுக்கோட்டை
நேற்றிரவு நடந்த கார் விபத்தில் சிக்கிய அதிமுக முன்னாள் எம் எல் ஏ ராசு படுகாயம் அடைந்துள்ளார்.

தற்போது புதுக்கோட்டை மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தலைமையில் அதிமுக பூத் கமிட்டி கூட்டம் நடைபெற்று வருகிறது. கூட்டத்தில் பங்கேற்பதற்காக முன்னாள் அமைசர் சி விஜயபாஸ்கர் சென்றுக் கொண்டிருந்தார்.
அப்போது கெண்டையன்பட்டி அருகே முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் காரை பின்தொடர்ந்து சென்ற கார் விபத்தில் சிக்கியது. அதாவது முன்னாள் எம்எல்ஏ நெடுஞ்செழியன் சென்ற கார், மீன் வியாபாரி ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்தகாரில் பயணம் செய்த முன்னாள் எம்எல்ஏ ராசு, கார் ஓட்டுநர் ரமணி மற்றும் மீன் வியாபரி படுகாயமடைந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.