டெல்லி

ஷ்ய அதிபர் புதின் பயங்கரவாதிகளுக்கு எதிரான தாக்குதலுக்கு தனது ஆதரவை தெரிவ்த்துள்ளார்.

இன்று பிரதமர் மோடியுடன் ரஷிய அதிபர் புதின் தொலைபேசி வாயிலாக பேசிய போது, பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக புதின், மோடியிடம் ஆலோசனை நடத்தினார். மேலும் பஹல்காம் தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்த புதின், உயிரிழந்த அப்பாவி மக்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளார்.

பிரதமர்  மோடியிடம்  ரஷ்ய அதிபர் புதின்,

”பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய பயங்கரவாதிகள் தண்டிக்கப்பட வேண்டும். ந்தியா எடுக்கும் நடவடிக்கைக்கு முழு ஆதரவு அளிக்கப்படும்

என்று கூறியுள்ளார்

இந்தியா – ரஷியா உறவை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக பிரதமர் மோடியும் புதினும் ஆலோசனை நடத்தியுள்ளனர். இந்த ஆண்டு இறுதியில் நடைபெறும் ரஷியா- இந்தியா இடையேயான வருடந்திர உச்சி மாநாட்டில் பங்கேற்க வருமாறு புதினுக்கு பிரதமர் மோடி அழைப்பும் விடுத்துள்ளார்.