டெல்லி
இன்று பிரதமர் மோடி பாதுகாப்பு செயலரை சந்தித்துள்ளார்.

கடந்த 22 ஆம்ம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில், 26 சுற்றுலாப் ணிகள் கொல்லப்பட்டனர். இதை தொடர்ந்து, இந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
இந்தியா பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்ற முனைப்பில் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் பாதுகாப்புத்துறை உயரதிகாரிகளுடன் பிரதமர் மோடி தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், மத்திய பாதுகாப்புத்துறை செயலாளர் ராஜேஷ் குமார் சிங், பிரதமர் மோடியை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது இந்தியா – பாகிஸ்தான் விவகாரம் குறித்து ஆலோசனை நடத்தியிருக்கலாம் என்று தெரிகிறது. சுமார் அரை மணி நேரம் இந்த ஆலோசனை நடைபெற்றது.