சென்னை: கிரானைட் ஊழல் விசாரணை அதிகாரி சகாயம் ஐஏஎஸ்-க்கு வழங்கப்பட்டு வந்த போலீஸ் பாதுகாப்பு விலக்கப்பட்டது சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், அவருக்கு போதிய பாதுகாப்பு வழங்கப்படும் என தமிழ்நாடு  காவல்துறை உறுதி அளித்துள்ளது.

 ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி உ.சகாயத்துக்கு போதிய பாதுகாப்பு வழங்கப்படும் என்று தமிழக காவல் துறை நீதிமன்றத்தில் உறுதியளித்துள்ளது

 ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயம், நாமக்கல், மதுரை மாவட்டங்களில் ஆட்சியராகவும் பல்வேறு துறைகளில் உயரதிகாரியாகவும் பணியாற்றியிருந்தார்.

இவர்  உயர்நிதிமன்ற உத்தரவின்படி சட்டத் துறை ஆணையராக பணியாற்றினார். அப்போது மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற  கிரானைட் குவாரிகளில் நடந்த ஊழலை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தார். இது தொடர்பான வழக்கு விசாரணையில் உள்ளது. இந்த வழக்கின் விசாரணையின்போது, சாட்சியம் அளிக்க மதுரை நீதிமன்றத்தில் சகாயம் ஆஜராகாமல் இருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

இதற்கிடையில், சகாயம் தரப்பில்,  அரசு வழக்கறிஞருக்கு கடிதம் அனுப்பப்பட்டது. அதில், தனக்கு வந்துள்ள பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக விசாரணைக்கு மதுரை நீதிமன்றத்தில் ஆஜராக வாய்ப்பில்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

முன்னதாக தமிழ்நாட்டில் உள்ள குவாரிகளில் நடந்த முறைகேடு குறித்து விசாரிக்க சிறப்பு அதிகாரியாக சகாயத்தை நீதிமன்றம் நியமித்தது. இதையடுத்து அவர் 1990ஆம் ஆண்டு முதல் சுமார் 24 ஆண்டு காலமாக நடந்து வந்த முறைகேட்டை வெளியே கொண்டு வந்தார். 600 பக்க அறிக்கை அவர் தாக்கல் செய்த 600 பக்க அறிக்கையின் மூலம் ரூ 1 லட்சம் கோடி ரூபாய்க்கு குவாரிகளில் முறைகேடு நடந்திருப்பது தெரியவந்தது. இவருக்கு கடந்த 2018ஆம் ஆண்டு முதல் உயர்நீதிமன்றத்தின் உத்தரவுபடி பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது.  தற்போது,  அவருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டதை அடுத்து கோர்ட்டுக்கு சென்ற சகாயம், தனக்கு பாதுகாப்பு அளிக்க கோரினார். அதன்படி நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்து மீண்டும் அவருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது போலீஸ் பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்ட நிலையில் சகாயம், அரசு வழக்கறிஞருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில்,  தனக்கு வழங்கப்பட்டு வந்த காவல்துறை பாதுகாப்பு மாநில அரசு எந்தவித முன்னறிவிப்புமின்றி  விலக்கிக் கொண்டது. இதனால், . என் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது. பாதுகாப்பு விலகல் பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டது தவறானது, முறையற்றது, கிரானைட் குவாரி முறைகேட்டில் ஈடுபட்டவர்களின் கடந்த கால செயல்பாடுகளை கருத்தில் கொள்ளாமல் எனக்கு மாநில அரசு கொடுத்த பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டது. எனவே எனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதை நீதிபதியிடம் தெரிவிக்க வேண்டும் என சகாயம் ஐஏஎஸ் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

சமீபகாலகமா தமிழ்நாடில் சமுக ஆர்வலர்கள் கொலை செய்யப்படுகிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளதுடன்,  புதுக்கோட்டை ஜகபர் அலி கொலை அண்மையில் புதுக்கோட்டையில் நடந்த ஜகபர் அலி கொலை, நெல்லையில் நடந்த ஜாகீர் உசேன் கொலைகளை சுட்டிக் காட்டி சகாயம் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இது சலசலப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து சகாயத்துக்கு போதிய பாதுகாப்பு வழங்கப்படும் என காவல்துறை உறுதி அளித்துள்ளத.

இது குறித்து தமிழக காவல் துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில்,  சட்டவிரோத கிரானைட் சுரங்க வழக்கு தொடா்பாக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி உ. சகாயத்துக்கு மதுரை சிறப்பு நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியிருந்தது. ஆனால், தன்னுடைய பாதுகாப்பு காரணங்களால் அவரால், விசாரணைக்கு ஆஜராக இயலவில்லை என்றும், தனக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டது நியாயமற்றது என்றும் அவா் கூறியதாகத் தெரியவருகிறது.

சட்டவிரோத கிரானைட் சுரங்கம் தொடா்பான முறைகேட்டை விசாரிக்கும் சிறப்பு அதிகாரியாக சகாயம் செயல்பட்ட காலத்தில் கடந்த 2014 முதல் 2023-ஆம் ஆண்டு வரை அவரது பாதுகாப்புக்காக காவல் துறை சாா்பில் காவலா் ஒருவா் வழங்கப்பட்டது. பின்னா் 2023 -ஆம் ஆண்டு நடைபெற்ற பாதுகாப்பு மறுஆய்வு குழு கூட்டத்தின்போது, குறிப்பிடத்தக்க எந்தவொரு அச்சுறுத்தலும் இல்லாத 22 பேருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பை விலக்கிக் கொள்ள முடிவெடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில், சகாயத்துக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பும் விலக்கிக்கொள்ளப்பட்டது. இந்த முடிவு, சரியான முறையில் பரிசீலனை செய்யப்பட்ட பின்பே எடுக்கப்பட்டது.

எனினும், நீதிமன்றத்தில் எவ்வித பயமும் இன்றி சாட்சியங்களை அளிப்பதற்கு ஏதுவாக, ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி உ.சகாயத்துக்கு போதிய பாதுகாப்பு வழங்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே சகாயம், சட்ட ஆணையராக இருந்த போது தனக்கு இரு மிரட்டல்கள் வந்தன என்றும் தன்னை வெட்டி கனிம சுரங்கத்தில் வீசிவிடுவோம் என மிரட்டியதாகவும் இது குறித்து தான் புகாரளித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை  என குற்றம்சாட்டி உள்ள சகாயம், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கிரானைட் வழக்கில்,  நரபலி கொடுத்த சுடுகாட்டில் சடலத்தை தோண்டி எடுக்க போலீசார் ஒத்துழைக்கவில்லை என்றும் இரவு நேரம் எனக் கூறி போலீசார் அலைக்கழித்தனர் என்றும் தெரிவித்திருந்தார். எனினும் அசராத சகாயம் குழுவினர் இரவு எத்தனை மணி நேரமானலும், புகாரில் குறிப்பிட்ட இடத்தை தோண்டி எடுத்து உடலை ஆய்வு செய்த பிறகே இங்கிருந்து செல்வோம் எனக் கூறி சுடுகாட்டிலேயே முகாமிட்டு தங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. சுடுகாட்டில் பயமில்லை சென்னையில் நடைபெற்ற ஒரு விழாவில் தனக்கு சுடுகாட்டில் படுக்க பயமில்லை. ஆனால் சுதந்திர நாட்டில் இருக்கத்தான் பயமாக இருக்கிறது என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.