சென்னை: கல்வி நிலையங்களில் இரண்டே Agenda தான் இருக்கவேண்டும். ஒன்று, Scientific Approach, மற்றொன்று, Social Justice என்று கூறிய முதலமைச்சர் ஸ்டாலின், கல்வி நிலையங்களில் அறிவியல் கருத்துகள் மட்டுமே கற்பிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
கல்வி நிலையங்கள் இதை கற்று தருகின்ற இடமாக தான் இருக்கவேண்டும். இதற்கு மாறான நிகழ்ச்சிகளை நடத்துவதோ, இதற்கு எதிராக பேசுகிறவர்களை கெஸ்ட்டாக கூப்பிடுவதோ நடந்தால், இந்த அரசின் Reaction கடுமையாக இருக்கும். ஏற்கெனவே ஒரு சம்பவத்தில் அது தெரிந்திருக்கும் என்றார்.

முதலமைச்சருக்கான பாராட்டு விழாவில் ஏற்புரை ஆற்றிய முதல்வர் ஸ்டாலின், தமிழ்நாட்டில் உயர்கல்வியை உலகளவில் மேம்படுத்த – துணைவேந்தர்கள், பதிவாளர்கள் கலந்து கொண்ட கூட்டத்தை சில நாட்களுக்கு முன்னால் தலைமைச் செயலகத்தில் நடத்தினேன். அதில் நான் வலியுறுத்தி பேசியது என்னவென்றால், உலகத் தரம் வாய்ந்த கல்வியை வழங்கவேண்டும் – உலகத்தில் இருக்கின்ற பல நாடுகளில் இருந்தும், நம்முடைய பல்கலைக்கழகங்களில் கல்வி கற்க மாணவர்கள் வரவேண்டும் – அதற்கான திட்டத்தை தயார் செய்யுங்கள் என்று சொல்லியிருக்கிறேன். கல்வி நிலையங்களில், Scientific கருத்துகள் மட்டுமே கற்பிக்கப்பட வேண்டும். பகுத்தறிவுக்கு எதிரான முட்டாள்தனமான கட்டுக்கதைகளை, மூடநம்பிக்கைகளை பரப்புகின்ற இடமாக பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் ஒருபோதும் இருக்கக் கூடாது!
“கல்வி நிலையங்களில் அறிவியல் கருத்துகள் மட்டுமே கற்பிக்கப்பட வேண்டும். பகுத்தறிவுக்கு எதிரான முட்டாள் தனமான கட்டுக்கதைகளை, மூட நம்பிக்கைகளை பரப்புகிற இடமாக கல்விக் கூடங்கள் இருக்கவே கூடாது. ரெண்டே அஜெண்டாதான் இருக்கணும். ஒன்னு Scientific Approach, Social Justice. இதற்கு எதிராக ஏதாவது நடந்தால் அரசின் ரியாக்ஷன் கடுமையா இருக்கும்”
“CM ஆகி மக்களுக்குத் தேவையான திட்டங்களை தீட்டினால், After all மத்திய அரசின் ஏஜெண்டாக நியமிக்கப்பட்ட, Temporary-ஆ தங்கி இருக்கிற ஒரு கவர்னர் அவைகளை தடுத்து நிறுத்த முடியுமென்றால், மக்கள் போடுகிற ஓட்டுக்கு என்ன மரியாதை?”
படிக்காமாலேயே பெரிய ஆள் ஆகிவிடலாம்.. பணம் சம்பாதிக்க படிக்க வேண்டும் என்று அவசியமில்லை.. யூடியூப்-ல் கூட சம்பாதிக்கலாம் இன்ஸ்டாகிராமில் அந்தக் கடை போடலாம், இந்தக் கடை போடலாம்” என்று டிசைன் டிசைனா ஏமாற்றுவார்கள்.
அந்த வலையில் சிக்கிவிடாதீர்கள் உங்களுக்கு விருப்பமான எந்த வேலையையும், தொழிலையும் செய்யலாம். அது தவறில்லை.
ஆனால், எல்லாவற்றிற்கும் கல்விதான் அடிப்படை! மறந்துவிடாதீர்கள். படிப்பு பயனற்றது என்று யாராவது சொன்னால், அவர்களை Silent-ஆக உங்களுடைய வாழ்க்கையில் இருந்து ‘Avoid’ செய்யுங்கள். கல்வி நிலையங்களில் அறிவியல் கருத்துகள் மட்டுமே கற்பிக்கப்பட வேண்டும்.
இவ்வாறு கூறினார்.