திருவாரூர்: ஒரே மாவட்டத்தில் அடுத்தடுத்து 15 மின்சார டிரான்ஸ்பார்மர்கள் திருட்டு போயுள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் திருவாரூர் மாவட்டத்தில் அரங்கேறி உள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் சமீபத்தில் ஒரே நேரத்தில் 15 டிரான்ஸ்பார்மர்களை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்த காவல்துறையினர், டிரான்ஸ்பார்மர் திருட்டு தொடர்பாக 4 பேரை கைது செய்துள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு திருவாரூர் அருகே பழையவலம் பகுதியில் சேனாவதி வாய்க்கால் பகுதியில், அமைக்கப்பட்டு பயன்பாட்டில் இருந்த 16 கிலோவாட் திறன் கொண்ட மின்மாற்றியை சமீபத்தில் மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். முன்னதாக மின்மாற்றி முறையாக அமைக்கப்படாமல் இருந்ததால், அது பாரம் தாங்காமல் கீழே விழுந்த நிலையில், மர்ம நபர்கள், மின்மாற்றியின் மின்சாரத்தை துண்டித்துவிட்டு, அதில் இருந்து மின்சாத பொருட்கள், மற்றும் காப்பர் உயர்களையும் வெட்டி எடுத்துச் சென்றுள்ளனர். இந்த பரபரப்பு அடங்குவதற்குள், அடுத்தடுத்து இதே பாணியில், மாவட்டத்தின் 15-க்கும் மேற்பட்ட இடங்கிளல் உள்ள டிரான்ஸ்பார்மர்களில் திருட்டு நடந்ததாக கூறப்படுகிறது. அதாவது, திருவாரூர் மாவட்டத்தில் கச்சனம், காக்கழனி, கங்களாஞ்சேரி, வடபாதிமங்கலம், கூத்தாநல்லூர், எட மேலையூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இந்த திருட்டு சம்பவம் நடந்துள்ளது.
இந்த திருட்டு சம்பவம் மின்சார வாரியத்துக்கு பெரும் தலைவியை கொடுத்தநிலையில், இதுதொடர்பாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு, விசாரணை நடைபெற்று வந்தது. காவல் நிலைய உதவி ஆய்வாளர் சுந்தரமூர்த்தி மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
போலீஸ் விசாரணையில் , இளைஞர்கள் திருட்டு கும்பல் ஒன்று இந்த திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது. நாகை மாவட்டம் வெங்கிடங்கால் கிராமத்தை சேர்ந்த ரஜினிகாந்த் (20), உத்தமசோழபுரம் பகுதியை சேர்ந்த வெற்றிச்செல்வம் (20), மகேஷ் குமார் (21) ஆகிய மூவரும் சேர்ந்து மின்மாற்றியில் உள்ள காப்பர் கம்பியை வெட்டி, விற்பனை செய்து வந்தது கண்டறியப்பட்டது. இதுதொடர்பாக அவர்களை காவல்துறையினர்கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில், திருடப்பட்ட டிரான்ஸ்பார்மர்களை, சோழங்கநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த ஜான் பீட்டர் (45) என்பவரிடம் விற்பனை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து உடனடியாக ஜான் பீட்டர் என்பவரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் 4 பேரையும் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி நாகப்பட்டினம் கிளை சிறையில் அடைத்தனர்.
இதேப்போல் திருவாரூர் மாவட்டத்தில் மற்ற இடங்களில் நடைபெற்ற மின் மாற்றி திருட்டில் கைது செய்யப்பட்டவர்களுக்கு தொடர்பு இருக்கிறதா? என்பது குறித்தும் காவல் துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். மேலும் இந்த திருட்டு கும்பலுடன் மேலும் யாருக்காவது தொடர்பு இருக்குமா என்பது குறித்தும் விசாரிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் திருவாரூர் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மறைந்த முதல்வர் கருணாநிதியின் சொந்த ஊரான திருவாரூரில், தமிழ்நாடு மின்வாரியத்துக்கு சொந்தமான டிராஸ்பார்களை ஒரு கும்பல் திருடி சென்றுள்ள அவலம் அரங்கேறி இருப்பது பேசும்பொருளாக மாறி வருகிறது.