
மேஷம்
பிசினஸ்ல எதிர்பார்க்கும் லாபம் கிடைத்து நிம்மதியும் சந்தோஷமும் வழங்கும். வியாபாரம் அபிவிருத்தி அடைய கூடுதலான முயற்சியும் உழைப்பும் நல்ல பலனை அளிக்கும். செலவுகளுக்கேற்ற பணவரவும் இருக்கும் என்பதால் சமாளித்து விடுவீங்க. சகோதரர்களிடம் இருந்து மனசுக்கு மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும். தாயின் உடல் ஆரோக்கியத்தில் இருந்துக்கிட்டிருந்த பிரச்னைகள் தீர்ந்து நிம்மதி வரும். திருமணத்துக்கு வரன் தேடும் முயற்சிகளில் பொறுமை அவசியம். இருக்கும் வீட்டை மாற்றும் முயற்சியில் ஒரு வழியா நல்ல பலனைப் பார்ப்பீங்க. சண்டை வராம பார்த்துக்குங்க. பெரிய மனிதர்களின் சந்திப்பு தொழிலுக்கு சப்போர்ட்டா விளங்கும். உறவினர்கள் ஒருவகையில் உதவியாக இருப்பாங்க. நண்பர்கள் மூலமாக கிடைக்க வேண்டிய ஆறுதலும் நிம்மதியும் கட்டாயம் கெடைக்கும்.
ரிஷபம் தந்தை வழி சொத்து பற்றி இருந்து வந்த வழக்குகளை உங்களின் சாதுர்யமன செயல்பாடுகளால் இரு தரப்பும் திருப்தியடையும்படி ஓர் முடிவுக்கு வரச் செய்யும். வேலைக்குச் செல்லும் அன்பர்களுக்கு இந்த வாரம் சில சலுகைகள் கிடைக்கும் என்பதால் உற்சாகமாகக் காணப்படுவீங்க. புதிய வேலைக்கு முயற்சிப்பவர்கள் சற்று பொறுமை காக்கவேண்டியது அவசியம். திட்டமிட்ட காரியங்கள் திட்டமிட்டபடியே நடைபெறும். தெய்வீக சிந்தனை மேலோங்கும். பிள்ளைங்க மூலமா ஹாப்பி செய்தி வீடு வந்து சேரும். சிஸ்டர்ஸ்ஸும் பிரதர்ஸ்ஸும் உங்கள் நலனில் அக்கறை காட்டுவாங்க. குடும்ப ஒற்றுமை பலப்படும். பொருளாதாரப் பற்றாக்குறை அகலும். தந்தைவழி உறவினரால் திடீர் நன்மைகள் ஏற்படக்கூடும். புதிய முயற்சி அனுகூலமாக முடியும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிப்பது உங்கள் செயல்மூலம்தான் தீர்மானமாகும்.
மிதுனம்
பிசினஸ்ல எதிர்பார்த்த லாபம் குறைவில்லாமல் கெடைக்கும். புதிய முதலீடுகள் இப்போது வேண்டாம். கடன் கொடுப்பதையும் கடன் வாங்குவதையும் இந்த வாரம் அவாய்ட் செய்யணுங்க. குடும்பத்தை நிர்வகிக்கும் லேடீசுக்கு சற்று சிரமம் குறையும் ரிலாக்ஸ்டான வாரம். தேவைக்கேற்ற பணம் கிடைக்கும். சற்றே தாமதமாகக் கிடைக்கும். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்கள் தங்கள் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்தி நல்ல பெயரை அநாயாசமாத் தட்டிக்கிட்டுப் போவீங்க. இந்த வாரம் பிள்ளைப்பேறு, புதிய தொழில் வாய்ப்புகள், லாட்டரி யோகங்கள், புண்ணியத்தல தரிசனங்கள் ஆகியவை ஏற்படும். பண விஷயத்தைப் பொறுத்தவரை திருப்திகரமான வாரமாக இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் தேர்ச்சி உண்டாகும். செலவுங்களை நீங்களே கட்டுப்படுத்திடுவீங்க.
கடகம்
மனசுல நிறைவைக் காண்பீங்க. ரொம்பக் காலமா எதிர்பார்த்த மற்றும் எதிர்பாராத மாற்றங்கள் வந்துசேரும். தொழில் வெற்றியாகும். ஆரோக்கிய விஷயங்களில் அலட்சியம் வேண்டாம். ஆமாம். சொல்லிப்புட்டேன். நீங்க எதிர்பார்த்த அளவுக்கு நிலைமை சீரடைய இன்னும் சில வாரங்கள் ஆகும். புதிய முயற்சியை வார ஆரம்பத்துலயே தொடங்குவது நல்லது. அரசுப் பதவியில உள்ளவங்க அதிகாரிங்க தயவால அனுகூலமான பலன்களை அடைவீங்க. உங்களுக்குக் கீழே பணி செய்யற ஊழியர்களுக்குக் கட்டளைகளை இடும்படியான அதிகாரம் அல்லது மிக்க உயர் பதவிகள் கிடைக்கும். வாகனங்களில் செல்கையில் எச்சரிக்கை தேவை. எழுத்துத் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். சிலருக்குக் கௌரவப் பட்டங்கள் கிடைக்கும். புதிய தொழில் தொடங்க எடுக்கப்படும் முயற்சிகளில் வெற்றி ஏற்பட்டுத் தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும்.
சிம்மம்
வாகனத்துல செல்லும்போது கவனமாகப் போங்க. சிலருக்குக் குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு உண்டாகும். முருகப்பெருமானை வழிபடுவது நலம் தரும். உத்தியோக முயற்சி கைகூடும். உறவினர்கள் உதவிக்கரம் நீட்டுவாங்க. பாதியில் நின்ற பணிகள் மீதியும் தொடரும். குடும்பத்தில் உள்ளவங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து ஹாப்பியா இருப்பீங்க. இந்த வாரம் மகான்களின் ஆசியும், புதிய தொடர்புகள் நன்மைகளும் ஏற்படும். போட்டி, பந்தயங்களில் வெற்றி கிடைக்கும். புத்திர பாக்கியம், சுபகாரிய நிகழ்ச்சிகள் ஆகியவற்றால் இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கும். புதிய தொழில் தொடங்க எடுக்கப்படும் முயற்சிகள் வெற்றி பெறும் காலம் கனிந்து வரும். பல வாரங்களாப் பார்க்காத வளங்கள் உங்களைச் சூழ்ந்து சந்தோஷத்துல திக்குமுக்காட வைக்கும்.
கன்னி
பெரிய மனிதர்கள் கனெக்ஷன் கிடைக்கும். அலைச்சல், மனக்குழப்பம் அதிகரிக்கும். நல்ல வேளையா நேர்மறை சிந்தனையை வளர்த்துக்குவீங்க. ஸோ.. பிழைச்சீங்க. உங்களுக்கு மட்டுமில்லாம, ஃபேமிலில உள்ள பெரியவங்களுக்கும் உடல் ஆரோக்கியம் மேம்படும். சிலருக்கு திடீர் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. எதிரிகள் வகையில் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த விஷயம் அனுகூலமாக முடியும். முக்கியப் பிரமுகர்களின் தொடர்பு கிடைக்கும். பணி உயர்வு நினைத்தபடி கிடைக்கும். கவர்ச்சிகரமான பொருட்களை விற்கும் வியாபாரிகள் தங்கள் வாடிக்கையாளர்களை நல்லபடியாக் கவர்ந்து இலாபத்தை அதிகரித்துக் கொள்ளுவீங்க. சில சமயத்துல சுறுசுறுப்பான நிலையும், சில சமயங்கள்ல கற்பனை பயமும் நிலவும். கல்வியில தேர்ச்சி ஏற்படக் கடின உழைப்பு தேவை.
துலாம்
சகோதரர்கள் ஆதரவா இருப்பாங்க. தந்தை வழியில் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். மகாலட்சுமியை வழிபட நன்மைகள் அதிகரிக்கும். ஆபீஸ்ல முன்னேற்றம் வர முன்னளவுக்குப் பாடுபட வேண்டியிருக்காது என்பது குட் நியூஸ். கடைசில வெற்றி பெறுவீங்க. பழைய வீட்டை புதுப்பித்து பெயின்ட் அடிச்சு.. இன்டிரியர் டெகரேஷன்லாம் செய்வீங்க. அரசாங்கத்தால் அனுகூலம் உண்டு. அரசுப் பணியாளர்களுக்கு எதிர்பார்த்தபடி தலைமைப் பதவிகள் தேடி வரும். ஓய்வெடுத்து, உல்லாசமாய்ப் பொழுது போக்குவீங்க. கோயில் கட்டுவதில் இணைந்து புண்ணியம் சேர்த்துக்குவீங்க. இந்த வாரம் சுபகாரியங்களுக்காக வீடே விழாக்கோலம் பூணும். திடீரென ஏற்படும். பயணங்களால் ஆதாயமும், மகிழ்ச்சியும் ஏற்படும். யார் மீதும் நீங்களாக முன் வந்து வழக்கத்துத் தொடுக்க வேண்டாம்.
விருச்சிகம்
தொழிலை விருத்தி செய்ய அதிக முதலீடு செய்வீங்க. இப்போ அதைச் செய்ய கரெக்டான நேரம்தான். வசீகரமாப் பேசி வாடிக்கையாளர்கள் மனசுல இடம் பிடிப்பீங்க. மனசுல நிம்மதி நெறையும். இளம் வயதினர் மனசை அலைபாய விடாமல் படிப்பில் மட்டுமே அக்கறை காட்ட வேண்டும். இல்லாட்டி ஆசை வார்த்தைக்கு அடிமைப்பட்டு தடம் மாறி போகக் கூடிய சூழ்நிலை உருவாகலாம். வீடு கட்டுவதற்கான அடித்தளம் அமைப்பீங்க. மணல் வியாபாரத்தில் அரசாங்க அங்கீகாரம் பெறுவீங்க. விரும்பிய பொருட்களை எல்லாம் வாங்கிக் குவிப்பீர்கள். சுகமும் ஆடை ஆபரண சேர்க்கை, புத்திர பாக்கியம் மற்றும் எதிர்பாராத பண வரவுகள் ஆகியவை ஏற்படும். புது புது முயற்சியில் ஈடுபட்டு நல்ல வேலையில சேருவீங்க. பயங்கள் நீங்கி மனசுல நிம்மதி நிலவும்.
சந்திராஷ்டமம் : மே மாதம் தேதி 1 முதல் தேதி 3 வரை
சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாக இருக்க வேண்டும்.
தனுசு
இந்த வாரம் பொன் பொருள் ஆபரணங்கள் ஆகியவை விதவிதமாகக் கிடைக்கும். நல்ல பண்பாளர்களின் நட்பும், அன்பும் கிடைக்கும். மனதில் தெய்வ பக்தி மேலிடும். ஊழியர்களின் வேலை திறனை மேலதிகாரிகள் உற்சாகமாக பாராட்டுவாங்க. தனியார் துறை ஊழியர்களும் அலட்சியம் காட்டாமல் வேலை பார்த்து உற்பத்தியை பெருக்குவாங்க. உணவு சம்பந்தமான பிசினஸ்.. ஹோட்டல் தொழிலெல்லாம் ரொம்பவே சிறப்பாக நடக்கும். துணி வியாபாரம் அமோகமான லாபத்தை கொண்டு வரும். . வியாபாரப் பயணங்கள் மூலம் வரவேண்டிய பாக்கிகள் அனைத்தும் வசூல் செய்து விடுவாங்க. உறவு மற்றும் நண்பர்கள் பூரண ஒத்துழைப்பு கிடைக்கும்.. புதிய கொள்முதல் மூலம் தொழிலில் அதிகமாக ஆதாயம் ஏற்படும். தூர தேசங்களில் இருந்து எதிர்பார்த்த சுபகாரியச் செய்திகள் வருவதோடு செலவுகளும் அதிகரிக்கும். மேடைப் பேச்சாளர்கள் புகழ் பெ|றுவீங்க.
சந்திராஷ்டமம் : மே மாதம் தேதி 3 முதல் தேதி 5 வரை
சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாக இருக்க வேண்டும்.
மகரம்
முக்கிய முடிவுகள் எதையும் எடுக்குமுன் நல்லா யோசிச்சு, உங்க நலம் விரும்பிங்க கிட்ட ஆலோசனை கேட்டு, அதுக்குப் பிறகு டிஸைட் செய்ங்க. உறவினர்கள் வகையில் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். மற்றவர்களுடன் வீண் விவாதம் செய்வதைத் தவிர்த்தால் நிம்மதியான வாரமா இருக்கும். . நல் ஆரோக்கியம் ஏற்படும். அழகான, எழில் நிறைந்த வீடு வாங்க சான்ஸ் உள்ளது.. தாயின் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. சிலருக்குப் புதுப்புதுப் பதவிகளும் அதனால் வருவாய் பெருக்கமும் ஏற்படும். அரசாங்கத் துறைகள் மூலம் எதிர்பார்த்த அனுகூலங்கள் நல்லபடியா வந்து சேரும். மேடைப் பேச்சாளர்கள் தங்கள் பேச்சின் மூலம் வருமானம் ஈட்டுவர். புகழ் கிடைக்கும். யார் வம்புக்கும் போகாமல் இருப்பது நல்லது. வீணாய்க் கற்பனை பயம் கொள்ள வேண்டாம்.
சந்திராஷ்டமம் : மே மாதம் தேதி 5 முதல் தேதி 8 வரை
சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாக இருக்க வேண்டும்.
கும்பம்
எதிர்பார்த்த சுபச்செய்தி கிடைக்கக்கூடும். அதிகாரிகளால் ஆதாயம் கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது. சகோதரர்களால் நன்மையும் மகிழ்ச்சியும் ஏற்படக்கூடும். வீட்ல மங்கள காரியங்கள் நடப்பதற்கான சூழ்நிலை உருவாகும். வெளியூர் பயணங்களின் மூலமாக வருமானம் பார்ப்பீங்க. குடும்பத்தின் மீதுள்ள அக்கறையால் அதிக நேரம் உழைப்பீங்க. யாருக்கும் வாக்குக் குடுக்கவே குடுக்காதீங்க. ஜாமீன் கையெழுத்துப் போடவே போடாதீங்க. வேற வழியே இல்லைப்பா/ இல்லைம்மா. மனசைக் கல்லாக்கிக்கிட்டு நோ சொல்லிடுங்க. முன்பிருந்த உடல் நலக்கோளாறுங்க சரியாப்போகிற வாரம் இது. மம்மி டாடியின் ஆதரவு நல்ல விதத்தில் கிடைக்கும். கேட்ட இடத்துல உதவிகள் கிடைக்குமுங்க. முன்பைவிட அநாயாசமா விஷயங்கள் முடிய ஆரம்பிக்கும். தொழிலில் இருந்த தொல்லை அகலும்.
மீனம்
நீங்க கொஞ்சம்கூட எதிர்பாராத இடத்திலிருந்து பணவரவு கிடைக்கும். அரசு வேலையில் உள்ளவங்களுக்கு உத்தியோக உயர்வு உற்சாகத்தை கொடுக்கும். சிலருக்கு வேலையில் இடமாற்றம் ஏற்படலாம். காதலர்கள் பொறுமையை கடைபிடிக்கணுங்க. ரொம்ப நாளா உடம்பைப் படுத்திக்கிட்டிருந்த நோய் அகன்று நிம்மதிப் பெருமூச்சு வரும். எதை எடுத்தாலும் தடை தாமதங்கள் என்று சலிப்பு ஏற்பட்டாலும் கடைசியில் நல்லபடியாக முடிந்து நிம்மதியளிக்கும். நீங்க பிஸினஸ் செய்யறவரா? எனில் பார்ட்னர்களின் ஒத்துழைப்பால் தொழிலில் முன்னேற்றம் அடைவீங்க. புதிய சொத்துக்கள் வாங்குவீங்க. எப்பவோ வாங்கிப் போட்ட நிலத்துல வீடு கட்ட ஏற்பாடு செய்வீங்க. பிள்ளைகளுக்காக நகைகள் வாங்கி சேர்ப்பீங்க. அப்பா அம்மாவோட ஆசீர்வாதத்தால, நீண்ட நாளாக ஆசைப்பட்ட வாகனத்தை வாங்குவீங்க.