சென்னை: சென்னை மாநகராட்சி சார்பில் நடப்பாண்டுக்கான  மாணவர் சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில், வீடு வீடாக சென்று மாணவர்கள் சேர்க்கை வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில்,   இதுவரை  13 ஆயிரத்து 800 மாணவர்கள் சேர்ந்துள்ளதாகவும்,. இது கடந்த ஆண்டை விட இருமடங்கு அதிம் என  சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசு கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது சென்னை பட்ஜெட்டில் வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, நகரில் 69 நடுநிலைப் பள்ளிகள், 72 உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் உட்பட 141 அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு விளையாட்டுத் திறனை மேம்படுத்த மாநகராட்சி ரூ.2.34 கோடியை ஒதுக்கியது. இதன்முலம் மாணவர்கள் கல்வியில் உயர்நிலை அடைய பல்வேறு நடவடிக்கைளை மேற்கொண்டு வருகிறது.

இதைத்தொடர்ந்து அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகளில்  மாணவர் சேர்க்கையும் அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாகவே மாணவர்கள் சேர்க்கைக்காக ஆசிரியர்கள் வீடு வீடாக சென்று பெற்றோர்களை சந்தித்து மாணவர்களை அரசு பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுத்து வருகின்றன. அதுபோல தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் செலுத்துவதை தவிர்த்துவிட்டு அரசு பள்ளிகளில் சேர்க்க வலியுறுத்தி வருகின்றனர்.

மார்ச் 1-ம் தேதி முதல் சென்னை மாநகராட்சி பள்ளி  ஆசிரியர்கள் சார்பில் வீடு வீடாக மாணவர் சேர்க்கை நடந்தது. ஏப்ரல் மாத இறுதியில் 13 ஆயிரத்து 800 மாணவர்கள் மாநகராட்சி பள்ளிகளில் சேர்ந்து உள்ளனர்.

“கடந்தாண்டு இதே காலக்கட்டடத்தில் 6,000 மாணவர்களைச் சேர்த்தோம். தற்போதைய நிலவரப்படி, 13 ஆயிரத்து 800 பேரை சேர்த்துள்ளோம். இது கடந்த ஆண்டை விட இரு மடங்காகும் என்றும், இது  ஜூன் மாத இறுதிக்குள், இந்த எண்ணிக்கை 20 ஆயிரத்தைத் தாண்டக்கூடும்” என்று நிலைக் குழு (கல்வி) தலைவர் டி.விஸ்வநாதன் கூறினார்.

மேலும், சென்னையில் செயல்பட்டு வரும்,  141 பள்ளிகளுக்கும் தலா ஒரு தற்காலிக உடற்கல்வி ஆசிரியர் நியமிக்கப்படுவார். நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் ஆசிரியர்களுக்கு மாத ஊதியம் ரூ.15,000, மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு ஊதியம் ரூ.18,000 வழங்கப்படும் என்றும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.