திருச்சி: போலி ஆவணங்கள் மூலம் பத்திரப்பதிவக்கு துணை போவனதாக, திருச்சி மாவட்ட பதிவுத்துறை டிஐஜி ராமசாமி அதிரடியாக பதவி இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளார். இவர்மூலம் அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.
போலியான ஆவணங்கள் மூலம் பத்திரப்பதிவு செய்த திருச்சி பதிவுத்துறை டிஐஜி ராமசாமி, அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அவர் முறைகேட்டில் ஈடுபட்டது மூலம் அரசுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுத்தியுள்ளது அம்பலமாகியுள்ளது.

திருச்சி பதிவுத்துறை டிஐஜியாக இருப்பவர் ராமசாமி. இவர் மீது பல்வேறு முறைகேடுகள் புகார்கள் எழுந்ததால் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. இந்தநிலையில், அவர் மீது ஏராளமான புகார்கள் எழுந்ததால், அவரை சஸ்பெண்ட் செய்து, பதிவுத்துறை ஐஜி தினேஷ் ஆலிவர் பொன்ராஜ் உத்தரவிட்டார்.
இது குறித்து கூறிய பதிவுத்துறை அதிகாரிகள், திருச்சி பதிவுத்துறையில் துணைமண்டலப்பதிவுத்துறைத்தலைவராக இருப்பவர் ராமசாமி . இவர் மதுரையில் பலகோடி மதிப்புள்ள சொத்தினை போலியாக பதிவு செய்ய துணைபோனதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் மதுரை கிளை, இநத் விவகாரத்தில் பதிவுத்துறை டிஐஜி ராமசாமியுடம் உடந்தை என கூறியது. அத்துடன், அவர் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து தலைமறைவான ராமசாமி, பின்னர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் பெற்று வெளியே வந்தார். இதையடுத்து அவர்மீது ஏராளமான குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
1965ல் சார்பதிவாளராக பணியில் சேர்ந்த ராமசாமி, இதுவரை பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு பல கோடி மதிப்புள்ள சொத்துக்களை போலி ஆவணங்கள் மூலம் சேர்த்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், தேசிய நெடுஞ்சாலையில் பல நூறுகோடி மதிப்புள்ள நிலங்களை உறவினர் பெயரில் அன்றே வாங்கிக்குவித்ததாக புகார் எழுந்தது. ராமசாமி, சார்பதிவாளர காலம் முதல் உதவிப்பதிவுத்துறைத்தலைவர் காலம் வரை கிட்டத்தட்ட 47 ஆண்டுகளாக அரசாணைகளை தகர்த்து, விதிகளை உடைத்து தொடர்ந்து பத்திரங்களை பதிவு செய்து கல்லாகட்டி வந்துள்ளனர்.
இவர் திருப்பூரில் உதவி ஐஜியாக பணியாற்றிய காலத்தில்தான் போலி ரசீது மூலம் பத்திரப்பதிவு நடைபெற்று, பல கோடி ரூபாய் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது தெரியவந்தது. இது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. 18 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது. இவ்வாறு பல்வேறு குற்றச்சாட்டுக்களுக்கு ஆனா இவர், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, டிஐஜியாக பதவி உயர்வு பெற்று மீண்டும் தனது ஜகஜால வித்தைகளை தொடர்ந்து வந்தார்.
இந்த நிலையில், இவர்மீதான ஏராளமான குற்றச்சாட்டுக்கள் மற்றும், பதிவுப்பணியில் பணிபுரிந்த காலங்களில் பல போலி ஆவணங்கள் முலம் ஏராளமான பதிவுகள் நடைபெற்றுள்ளதும் விசாரணையில் தெரிய வந்ததால், தற்போது அவரை பதவி இடைநீக்கம் செய்து, பதிவுத்துறை தலைவர் உத்தரவிட்டு உள்ளார்.