சென்னை:  சென்னையில் குவியும் கட்டிட கழிவுகளை முறையாக அகற்றாத கட்டிட உரிமையாளர்களிடம் இருந்து அபராதம் வசூலிப்பது  தொடர்பாக சென்னை  மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதன்படி  விதிகளை மீறுவோருக்கு ரூ.1,000 முதல் ரூ.5 லட்சம் வரை அபராதம் விதிக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

சென்னை மாநகராட்சியின் மாதாந்திர மாமன்ற கூட்டம் ஏப்ரல் 30ந்தேதி அன்று நடைபெற்றது. பெருநகர சென்னை மாநகராட்சியின் மாமன்ற மேயர் ஆர்.பிரியா அவர்கள் தலைமையில் ரிப்பன் கட்டட மாமன்றக் கூட்டரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், துணை மேயர் திரு.மு.மகேஷ்குமார் , ஆணையாளர் ஜெ.குமரகுருபரன், இ.ஆ.ப., நிலைக்குழுத் தலைவர்கள், மண்டலக் குழுத் தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

இதில்,  நிறைவேற்ற தீர்மானத்தை தொடர்ந்து,  சென்னை மாநகராட்சி எல்லைக்குள் கட்டுமானக் கழிவுகளை ஒழுங்குபடுத்தும் வகையில் புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

சென்னை மாநகராட்சி எல்லைக்குள் கட்டுமானக் கழிவுகளை ஒழுங்குபடுத்தும் நோக்கில் புதிய மற்றும் கடுமையான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

இந்த விதிமுறைகளை மீறுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.1,000 முதல் அதிகபட்சமாக ரூ.5 லட்சம் வரை அபராதம் விதிக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

புதிய தீர்மானத்தின்படி, 20 ஆயிரம் சதுர மீட்டர் வரையிலான கட்டுமான தளங்களில் விதிமீறல் கண்டறியப்பட்டால் ரூ. 25,000 வரை அபராதம் வசூலிக்கப்படும்.

சிறிய அளவிலான, அதாவது 500 சதுர மீட்டர் பரப்பளவு வரையிலான கட்டிடங்களுக்கு ரூ.10,000 வரை அபராதம் விதிக்கப்படும்.

குறைந்த மற்றும் நடுத்தர மதிப்புள்ள கட்டிடங்களில் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால், அவற்றை சரிசெய்வதற்கு 10 நாட்கள் அவகாசம் வழங்கப்படும்.

இந்த கால அவகாசத்திற்குள் விதிமீறல்கள் சரி செய்யப்படாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது.

சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகரித்து வரும் கட்டுமானக் கழிவுகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பை குறைக்கவும், நகரை தூய்மையாக பராமரிக்கவும் இந்த புதிய வழிகாட்டு நெறிமுறைகள் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விதிமுறைகளை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி எச்சரித்துள்ளது.

இந்த புதிய அபராத விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வருகின்றன என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.