மதுரை:  மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் சித்திரைத் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் கோலாகலமாக  தொடங்கியது. இந்த விழாவில் பல ஆயிரம் பக்தர்கள் கலந்துகொண்டு சொக்கநாதர் மீனாட்சி அருள்பெற்றனர்.

உலக புகழ்பெற்ற மதுரை மீனாட்சி   மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் சித்திரைத் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது.  இன்று காலை சுவாமி சன்னதி முன்பாக உள்ள தங்கக் கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

முன்னதாக கொடிமரம் முன்பு மீனாட்சி, சுந்தரேஸ்வரர் ப்ரியாவிடையுடன் எழுந்தருளினார். பூஜைகளுக்கு பின்னர் மங்கள வாத்தியங்கள், வேதமந்திரங்கள் முழங்கிட காலை 10.35 மணிக்கு மேல் 10.59 மணிக்குள் மிதுன லக்னத்தில் கொடியேற்றம் நடைபெற்றது.

சித்திரைத் திருவிழா இன்று துவங்கியுள்ள நிலையில் அம்மனும் சுவாமியும் தினமும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா நடைபெற உள்ளது.

விழாவின் முக்கிய நிகழ்வுகளாக வரும் 6-ம் தேதி மீனாட்சியம்மன் பட்டாபிஷேகம், 8-ம் தேதி மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம், 9-ம் தேதி தேரோட்டமும் நடைபெறும்.

விழாவின் சிகர நிகழ்ச்சியாக வரும் 12-ம் தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளுகிறார். மீனாட்சி அம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியதால் மதுரை நகர் விழாக்கோலம் பூண்டுள்ளது.

சித்திரை திருவிழாவில் கலந்துகொள்ள மதுரை மட்டுமின்றி, தென்மாவட்டங்களைச் சேர்ந்த  ட்சக்கணக்கான பக்தர்கள், மதுரைக்கு வருகை தருவர்.  இதனால் மதுரை விழாக்கோலம் பூண்டுள்ளது.

மதுரை சித்திரை திருவிழா மே 8 ஆம் தேதி தொடக்கம் – முழு விவரம் – மாவட்ட ஆட்சியர் ஆலோசனை…