சென்னை: அமலாக்கத்துறை சார்பில் தொடரப்படும் வழக்குகளில்  93 சதவீத வழக்குகள் எதிர்க்கட்சிகள் மீதே தொடரப்படுகின்றன என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை குற்றம் சாட்டி உள்ளார்.

இதுதொடர்பாக  தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி உள்ளிட்டவர்கள் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து பழிவாங்கும் நோக்கோடு செயல்பட்டு வருவதை அனைவரும் அறிவார்கள். இந்தப் பின்னணியில் அமலாக்கத்துறை தொடுக்கிற வழக்குகளில் 93 சதவிகிதம் எதிர்க்கட்சிகள் மீது தான் தொடுக்கப்படுகின்றன.

இதில் தண்டனை விகிதம் 2 சதவிகிதம் கூட இல்லை என்பதை விட, அமலாக்கத்துறைக்கு அவமானம் வேறு எதுவும் இருக்க முடியாது. இதன்மூலம் அமலாக்கத்துறையின் நோக்கமே எதிர்கட்சிகளை பழிவாங்குவற்குத் தான் என்பதற்கு இதைவிட வேறு சான்று தேவையில்லை.

மத்திய புலனாய்வுத்துறை, அமலாக்கத்துறை ஆகிய அமைப்புகளை பா.ஜ.க. கைப்பாவையாக வைத்துக் கொண்டு காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட எதிர்கட்சிகளை அரசியல் ரீதியாக முடக்கி விடலாம் என முனைகிற நேரத்தில் டெல்லி நீதிமன்றம் சுரேஷ் கல்மாடி உள்ளிட்டவர்களை நிரபராதிகள் என விடுவித்திருப்பது டாக்டர் மன்மோகன்சிங் ஆட்சி மீது சுமத்தப்பட்ட அவதூறு குற்றச்சாட்டுகள் தவிடு பொடியாக்கப்பட்டிருக்கிறது.

இந்த தீர்ப்பை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வரவேற்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

முன்னதாக காமன்வெல்ஸ் கேம்ஸ் முறைகேடு தொடர்பாகஅப்போதை மத்திய காங்கிரஸ் அரசின் அமைச்சர்களாக இருந்த, அதாவது,  2010   காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை (CWG) நடத்தியதில் ஊழல் நடந்ததாக வந்த தகவல்கள் நாட்டில் பெரும் அரசியல் கொந்தளிப்பை ஏற்படுத்தின,  இதுதொடர்பாகஅமலாக்கத்தறை, சிபிஐ வழக்கு பதிவு செய்தது.  பல குற்றவியல் மற்றும் பணமோசடி வழக்குகள் பதிவு செய்ய வழிவகுத்தது. விளையாட்டுகளுக்கான இரண்டு முக்கியமான ஒப்பந்தங்களை வழங்குவதிலும் செயல்படுத்துவதிலும் திரு. கல்மாடி மற்றும் பலர் முறைகேடு செய்ததாக குற்றம் சாட்டப்பட்டனர்.

இந்த வழக்குகளில்,  போட்டிகளின் ஏற்பாட்டுக் குழுவின் முன்னாள் தலைவர் சுரேஷ் கல்மாடி, அப்போதைய பொதுச் செயலாளர் லலித் பனோட் மற்றும் பலர் மீதான பணமோசடி வழக்கில் , முறையான ஆதாரங்கள் கிடைக்காத நிலையில், இந்த வழக்கை மூடி அமலாக்க இயக்குநரகம் கோரிக்கை வைத்தது. அதை ஏற்று நீதிமன்றம் இந்த வழக்கில், இருந்து,  கல்மாடி உள்பட பலரை விடுதலை செய்து உத்தரவிட்டது.

இந்த நடவடிக்கையை கடுமையாக விமர்சித்த  , இந்த வழக்கு “நீதியைப் பற்றியது அல்ல” என்றும் பாஜக “பொய்களை ஆயுதமாக்குகிறது” என்றும் குற்றம் சாட்டியது குறிப்பிடத்தக்கது.

[youtube-feed feed=1]