பஹல்காம் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததை அடுத்து காஷ்மீர் எல்லையில் போர் பதற்றம் நிலவி வருகிறது.
தாக்குதலைத் தொடர்ந்து இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய நிலையில் பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகத்தை மூடியது.

மேலும் பாகிஸ்தானியர்களுக்கான விசா ரத்து மற்றும் இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்களை உடனடியாக நாட்டை விட்டு வெளியேறவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதற்கான கெடு நேற்றுடன் முடிவடைந்த நிலையில், ஏப்ரல் 24 முதல் அடுத்த 4 நாட்களில் 9 தூதர்கள் மற்றும் அதிகாரிகள் உட்பட 537 பாகிஸ்தானிய குடிமக்கள் இந்தியாவை விட்டு வெளியேறியுள்ளனர்
இதில், குறித்த நேரத்துக்குள் இந்தியாவை விட்டு பாகிஸ்தானியர்கள் வெளியேறாவிட்டால் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 3 லட்சம் அபராதம் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.