டெல்லி

மேலும் 26 ரபேல் போர் விமானங்கள் வானக இந்தியா பிரான்சுடன் ஒப்பந்தம் செய்துள்ளது

கடந்த 2016 ஆம் ஆண்டு இந்தியா, பிரான்ஸ் இடையே ரபேல் போர் விமானம்  தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தானது. ஒப்பந்தப்படி பிரான்சிடமிருந்து 36 ரபேல் போர் விமானங்களை இந்தியா கொள்முதல் செய்தது.

பிரான்சிடமிருந்து மேலும் 26 ரபேல் போர் விமானங்களை வாங்க இந்தியா முடிவு செய்தது. கடந்த 9 ஆம் தேதி இந்த போர் விமானங்களை வாங்குவது தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

பிரான்சிடம் இருந்து மேலும் 26 ரபேல் போர் விமானங்களை வாங்குவது தொடர்பான ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகியுள்ளது. 64 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் 26 புதிய ரபேல் போர் விமானங்கள் கொள்முதல் செய்யப்படுவதற்கான ஒப்பந்தம் இந்தியா-பிரான்ஸ் அதிகாரிகள் இடையே காணொலி காட்சி மூலம் நடைபெற்ற நிகழ்ச்சியில் கையெழுத்தானது.