சென்னை: சட்டப்பேரவையில் இன்று காவல்துறை மானிய கோரிக்கை மீது உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின், தமிழ்நாட்டில் மதவாதம் எந்த ரூபத்திலும் நுழைய முடியாது என்று கூறியதுடன், கோவையில் கோவில் அருகே நடைபெற்ற குண்டுவெடிப்பின்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாகவும் கூறினார்.

தமிழ்நாட்டில் மதவாத எதிர்ப்பு சக்திகள் இருப்பதாக வானதி கூறியிருக்கிறார். எப்படி? எங்கு இருக்கிறது? என கூற வேண்டும். தமிழ்நாட்டில் மதவாதம் எங்கு இருக்கிறது என்று சொல்லுங்கள் என கேள்வி எழுப்பிய அவர், காஷ்மீர் போன்ற சம்பவம் இங்கு நடைபெறாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
பொத்தாம் பொதுவாக பேசினால் விளக்கம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று கூறினார். அப்போது பேசிய சபாநாயர் அப்பாவு, இந்தியாவில் மத பயங்கரவாதம் இருக்கிறது என்று சொன்னால் ஏற்றுக்கொள்வார்கள் என்று கூறினார்.
இதைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறுகையில், பா.ஜ.க. ஆளுகின்ற மாநிலங்களில் என்ன நடக்கிறது என வானதிக்கே தெரியும் என்று கூறியவதுடன், சில பகுதிகளுக்கு பிரதமர் கூட சென்று பார்க்கவில்லை என்று குற்றம் சாட்டியவதுடன், தமிழ்நாட்டை பொறுத்தவரை மதவாதம் உள்ளே நுழைய முடியாது என்றார்.
கோவையில் கோவில் அருகில் நடைபெற்ற சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தவர், காஷ்மீர் மாதிரி இங்கே நடக்கக்கூடாது என வானதி பேசி உள்ளார், அப்படி தமிழகத்தில் நிச்சயமாக நடைபெறாது. *
காஷ்மீர் விவகாரம் தெரிந்தவுடன் நீங்கள் எடுக்கக்கூடிய எந்த நடவடிக்கையாக இருந்தாலும் உறுதுணையாக இருப்போம் என்று கூறினேன். காஷ்மீர் பிரச்சனையில் தமிழ்நாடு உறுதுணையாக இருக்கும்.
அதே வேளையில், வானதி சீனிவாசன் பா.ஜ.க. தலைமையிடம் பேசி தமிழகத்திற்கு வர வேண்டிய நிதியை பெற்றுத்தர வேண்டும் என கோரிக்கை வைக்கிறேன். தமிழகத்திற்கான நிதியை பா.ஜ.க.விடம் இருந்து பெற்று தர தயவு செய்து தமிழக பா.ஜ.க.வினர் குரல் கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.