சென்னை: ஊராட்சி பகுதிகளில்   அரசு அனுமதியின்றி விளம்பர பலகைகள் வைத்தால் ஓராண்டு சிறை  தண்டனை விதிக்கும் வகையிலான புதிய மசோதாவை அமைச்சர் ஐ.பெரியசாமி தாக்கல் செய்தார்.

தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்ற வருகிறது. ஏற்கவே பட்ஜெட் மீதான விவாதங்கள் முடிவடைந்த நிலையில், மானிய கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இன்று  முதல்வர் ஸ்டாலின் விதி 110ன் கீழ் அரசு ஊழியர்களுக்கான பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.

இதைத்தொடர்ந்து  கும்பகோணத்தில் கருணாநிதி பல்கலைக்கழகம் அமைப்பது தொடர்பாக பேரவையில் சட்ட மசோதா கொண்டு  வந்து உயர்கல்வித்துறை அமைச்ச்ர கோவி செழியன் உரையாற்றினார்.

அதைத்தொடர்ந்து, ஊராட்சி பகுதிகளில் அனுமதியின்றி விளம்பர பலகைகள் வைத்தால் ஓராண்டு சிறை  தண்டனை விதிக்கும் வகையில்,  தமிழக அரசு சார்பில் அமைச்சர் ஐ.பெரியசாமி சட்ட முன்வடிவு தாக்கல் செய்தார்.

அதன்படி,   ஊராட்சி பகுதிகளில் அனுமதியின்றி விளம்பர பலகைகள், மின்னணு திரைகள் வைத்தால் ஓராண்டு சிறை தண்டனை மற்றும் ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆண்டு ஒன்றுக்கு ஒரு சதுர மீட்டருக்கு ரூ.15,000 என்ற கட்டணத்தின் அடிப்படையில் 3 ஆண்டுகள் உரிமம் பெறலாம் என்றும் மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மசோதாவை ஊராட்சிகளில் விளம்பர பலகைகளை ஒழுங்குப்படுத்தும் மசோதாவை அமைச்சர் ஐ. பெரியசாமி தாக்கல் செய்தார்.