கோவை: கோவை மாவட்டத்தில் செமி கண்டக்டர் பூங்கா அமைக்க பல்லடம் அருகே 100ஏக்கர் நிலம் தேர்வுசெய்யப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

தமிழ்நாடு அரசு கடந்த மார்ச் மாதம் தாக்கல் செய்த 2024-25ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில், கோவை மாவட்டத்தில் செமி கண்டக்டர் பூங்கா அமைக்க இருப்பதாக அறிவித்திருந்து. இந்த நிலையில், தற்போது,    பல்லடத்தில் செமிகண்டக்டர் பூங்கா அமைக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதற்காக கோவையை அடுத்த திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் செமி கண்டக்டர் பூங்கா அமைக்க சுமார் 100 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. பல்லடம்   அருகே உள்ள கோத்தனூர் கிராமம் பகுதியில் சுமார் 100 ஏக்கர் நிலத்தில் செமி கண்டக்டர் பூங்கா அமைக்கப்பட இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்,.

இன்றைய நவின உலகமே செமி கண்டக்டர்கள் மூலமாகத்தான் இயங்கிக்கொண்டிருக்கிறது. கார்கள், தொலைக்காட்சிகள், குளிர்சாதனப் பெட்டிகள், வாஷிங் மெஷின்கள், கம்ப்யூட்டர்கள், லேப்டாப்கள், மொபைல்கள் என நம்மை சுற்றியுள்ள எல்லா சாதனங்களும் செமி கண்டக்டர்கள் இல்லாமல் தயாரிக்க முடியாது. அப்படிப்பட்ட அதிமுக்கியத்துவம் வாய்ந்த செமி கண்டக்டர் தயாரிப்புக்கு பெரிய அளவில் எதிர்காலம் உள்ளது. எந்த நாடு இப்போதே செமி கண்டக்டர் உற்பத்திக்கான ஆயத்த பணிகளை மேற்கொள்கிறதோ, எதிர்காலத்தில் அவை அசைக்க முடியாத உலக சக்தியாக மாறும் என்பதை கருத்தில்கொண்டு, அதனால் மத்திய, மாநில அரசுகள் செமி கண்டக்டர் தயாரிப்பு தொழில்களுக்கு முக்கியத்துவம் வழங்கி வருகின்றன.

இதனால் தமிழ்நாடு அரசு ஏராளமான செமி கண்டக்டர் உற்பத்தி ஆலைகளை தமிழ்நாட்டிற்கு ஈர்த்து வந்துள்ளது.   இதுதொடர்பான பணியில் தீவிரம் காட்டி வருகிறது. இந்தநிலையில்  தமிழ்நாடு   பட்ஜெட் தாக்கலின்போது, மின்னணுத் துறையில் புதுமை மற்றும் வளர்ச்சியை ஊக்குவிக்கவும், மின்னணு பொருட்கள் உற்பத்தி வளர்ச்சிக்காகவும் சென்னையில் ரூ.100 கோடியில் செமி கண்டக்டர் ஆய்வகம் அமைக்கப்படவுள்ளதாக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார்.

இதுமட்டுமல்லாமல், கோவை மாவட்டம் சூலூர் திருப்பூர் பல்லடத்தில் செமி கண்டக்டர் பூங்கா அமைக்கப்படும் என்றும்,   அன்னிய முதலீட்டாளர்கள் செமி கண்டக்டர் இயக்கம் தொடங்க ரூ.50 கோடி ஒதுக்கீடு. ரூ. 400 கோடியில் ஓசூரில் 5 லட்சம் சதுர அடியில் புதிய டைடல் பூங்கா அமைக்கப்படும். . 9 புதிய சிட்கோ தொழிற்பேட்டைகள் அமைக்க ரூ.366 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புதிய புனல்மின் நிலையங்கள் அமைக்க ரூ.11,721 கோடி ஒதுக்கீடு,கடல்சார் வள அறக்கட்டளைக்கு ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு  ஏராளமான அறிவிப்புகளை வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில், ஏற்கனவே அறிவித்தபடி பல்லடம் அருகே செமி கண்டக்டர் பூங்கா அமைப்பதற்கான இடங்கள் தேர்வு செய்யப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.