சென்னை: டாஸ்மாக் ரூ.1000 கோடி முறைகேடு நடைபெற்றுள்ள அமலாக்கத்துறை கூறிய நிலையில், அமலாக்கத்துறை  விசாரணையை  உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. இந்த உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு!

டாஸ்மாக் நிர்வாகத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக கூறி டாஸ்மாக் தலைமை அலுவலகம் மற்றும் மதுபான ஆலைகளில் அமலாக்கத்துறை சோதனை 3 நாட்கள் சோதனை நடத்தியது. இதில், ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் முறைகேடு நடைபெற்று இருப்பதாகவும், இதில் அமைச்சர் செந்தில்பாலாஜி உள்பட பலருக்கு தொடர்பு இருப்பதும்  கண்டுபிடிக்கப்பட்டது.

தொடர்ந்து அமலாக்கத்துறை சோதனையை சட்டவிரோதம் என அறிவிக்க கோரி டாஸ்மாக் நிர்வாகம் மற்றும் தமிழக அரசு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதனை விசாரித்த நீதிமன்றம், அமலாக்கத்துறை சோதனை சட்டவிரோதமானது அல்ல எனவும் தொடர்ந்து சோதனை நடத்தலாம் எனவும் தீர்ப்பளித்து மனுவை தள்ளுபடி செய்தது.

இந்த நிலையில், உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக டாஸ்மாக் நிறுவனம் மற்றும் தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே டாஸ்மாக் வழக்கை வேறுநீதிமன்றத்துக்கு மாற்றகோரி தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு ஏற்க உச்சநீதிமன்றம் மறுத்துள்ள நிலையில், இந்த மனுவை ஏற்குமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது.

டாஸ்மாக்கில் அமலாக்கத்துறை ரெய்டு நடத்தியதில் அசாதாரணமானது ஏதுமில்லை! தமிழ்நாடு அரசின் மனுவை டிஸ்மிஸ் செய்து உயர்நீதிமன்றம் உத்தரவு..

டாஸ்மாக் ரூ.1000 கோடி ஊழல்? டாஸ்மாக் நிர்வாக இயக்குநர், பொதுமேலாளர்களுக்கு அமலாக்கத்துறை சம்மன்!

டாஸ்மாக் டெண்டரில் ரூ.1000 கோடி ஊழல்? அமைச்சர் செந்தில் பாலாஜியை குற்றம் சாட்டும் அறப்போர் இயக்கம்…