கோவை: பஹல்காம் தாக்குதல் தொடர்பாக அவதூறு பதிவு வெளியிட்ட சுந்தவல்லி உள்பட சிலர்மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாஜக மகளிர் அணி சார்பில் காவல்துறை யில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

காஷ்மீர் மாநிலம் பஹல்காம் சுற்றுலாத தளத்தில், சுற்றுலா சென்ற இந்துக்களை பயங்கரவாதிகள் சுட்டு கொன்றனர். இந்த தாக்குதலில் 28 பேர் உயிரிழந்த நிலையில், 10க்கும் மேற்பட்டோர் காயமுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து மத்தியஅரசு, பாகிஸ்தானுக்கு எதிரான கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அத்துடன், பயங்கரவாதிகளுக்கு ஆதரவாகவோ, இந்திய அரசாங்கத்திற்க்கு எதிராகவோ, இந்திய அரசாங்க சட்டதிட்டத்தை அவமதித்தோ, பாரத பிரதமர் மோடியையோ, மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவையோ யாரெனும் கேலி, கிண்டல், இழிவுபடுத்தியோ , ஜாதி, மத மோதலை தூண்டும் விதமாகவோ, ஜாதி, மத, மொழி ரீதியாக பிரிவினையை உண்டாக்கும் விதமாகவோ போன்ற வீடியோக்கள், பதிவுகள், போட்டோக்கள், ஆடியோக்கள் போன்றவற்றை internet-ல் உள்ள சமூக வளையதளங்களில் யாராவது பகிர்ந்தால் உடனே மத்திய புலனாய்வு அமைப்பு (NIA) எனப்படும் “NATIONAL INVESTIGATION AGENCY” தொடர்பு கொண்டு உடனே புகார் அளிக்கவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
அதன்படி வடமாநிலங்களில் அவதூறு பதிவிட்ட சிலர் கைது செய்யப்பட்ட நிலையில், தமிழ்நாட்டிலும் தேசவிரோத செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு ஆதரவாக கருத்துக்களை பதிவிடுபவர்களை கைது செய்ய வலியுறுத்தி பாஜக மகளிர் அணி சார்பில் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
பஹல்காம் தாக்குதல் சம்பவம் தொடர்பாக அவதூறு கருத்து பதிவிட்ட கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர் மற்றும் பெரியாரிஸ்டு சுந்தரவல்லி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாஜக மகளிரணி சார்பில் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. அதில் இந்திய ராணுவத்தையும், பாஜகவையும் விமர்சிக்கும் விதமான கருத்துகள் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இவர்மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. சுவாமி அய்யப்பன் குறித்து அவதூறாக பேசியது தொடர்பான வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் அபராதம் செலுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.