

மேஷம்
பொருளாதார நிலைமை நல்லபடியாவும் திருப்திகரமாவும் இருக்குங்க. அநாவசிய செலவுகள் இருக்காது. ஸோ… குடும்பத்துல மகிழ்ச்சியான சூழ்நிலை இருக்கும். கணவன் – மனைவிக் கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். அவங்க மனிதர்களாயும் உங்க மனிதர்களாயும் உங்க ரெண்டு பேருக்கிடையே ஏற்பட்டிருந்த வாக்குவாதமெல்லாம் சமாதானக் கொடியால் சரியாகும். ஆரோக்கியம் சின்ன சைஸ்ல பாதிச்சிருந்தாலும் டென்ஷன் வேணாங்க. உடனுக்குடன் சரியாகும். சிலருக்கு ஆன்மிகப் பயணம் மேற்கொள்ளும் சான்ஸ் உண்டு. பெரியோர்களின் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும். மதிப்பு, மரியாதை சிறப்பாக இருக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பர். பொன் பொருள் சேரும். குடும்பத்துல ஸ்மால் சைஸ் பிரச்னைங்க ஏற்பட்டு மறையும்.
ரிஷபம்
மிகவும் மகிழ்ச்சியும் பல வகைகளிலும் வளர்ச்சியும் தரும் வாரமா அமையும். வெளிவட்டாரத்துல செல்வாக்கு அதிகரிக்கும். புதிய முயற்சிகள் எல்லாமே ரொம்பவும் ஈஸியா சக்ஸஸ் ஆகும். பழைய பள்ளி கல்லூரித் தோழர்களையும் மீட் பண்ணி ஹாப்பியா பேசுவீங்க. மனைவி சைட் விருந்தினர் வருகை வீட்டில் கொண்டாட்டத்தையும், கும்மாளத்தையும் ஏற்படுத்தி மனதை குஷியாக வைக்கும். ஒங்களோட எண்ணங்கள் யாவும் ஈடேறும். புதிய சொத்துக்கள் சேரும். சுக சௌகரியங்கள் மேம்படும். எதிர்பார்த்தபடி தனவரவுகள் கைக்கு வந்து சேரும். வந்த பணத்தை தரும காரியங்களுக்கும் கோயில் குளங்களுக்கும் தாராளமாகச் செலவு செய்து மகிழ்வீங்க. கணவன் – மனைவிக்கி டையே அந்நியோன்யம் அதிகரிக்கும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும்.
மிதுனம்
தந்தை வழி உறவினர்கள்கூட முன்னாளில் உங்களுக்கு இருந்துக்கிட்டிருந்த வீண் விரோதம் ஒரு வழியா முற்றும் போட்டுக்கும். வாரத்தோட பிற்பகுதியில கணவன் – மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. வீடு, நிலம் தொடர்பான முயற்சிகள் சாதகமாக முடியும். அப்போவோட ஆரோக்கியம் மேம்படும். எதிர்பார்த்த பணவரவு கிடைப்பது மட்டுமில்லாம, எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகளும் ஏற்பட சான்ஸ் இருக்கு. குடும்பத்துக்குத் தேவையான சில சின்னச் சின்னப் பொருள்களை வாங்கி மகிழ்வீங்க. கணவன் – மனைவிக்கிடையே உள்ள சந்தோஷமும் புரிதலும் இன்கிரீஸ் ஆகும். வீட்ல உங்களுக்கோ அல்லது குடும்பத்துல உள்ள யாரேனும் ஒருவருக்கா.. திருமண முயற்சிகள் சாதகமா முடியும். மனசுல நிம்மதி பரவும்.
கடகம்
முன்பு கவலையோ கவலைன்னு பரபரத்தீங்களே? அதெல்லாம் தேவையில்லாத டென்ஷன்ஸ்தானே? இனியாச்சும் நல்லதே நடக்கும்னு நம்பிக்கயோட பொறுமையா இருங்கப்பா. உறவினர் மற்றும் நண்பர்கள் வீட்டு விருந்து விசேஷங்களில் கலந்துகொண்டு மனசை லைட்டாக்கிக்குவீங்க. சிலருக்கு வெளிமாநிலங்களில் உள்ள புகழ் பெற்ற புண்ணியத் தலங்களுக்குச் செல்லும் சான்ஸ் உண்டாகும். வேலையில் சிரத்தையும், கடின உழைப்பு காட்றீங்க. இது ஒங்களுக்கு, நல்ல முன்னேற்றங்களைத் தரும். அலைச்சல் அதிகம் உள்ள பயணங்கள் மேற்கொள்ள நேரும். ஆனாலும் அது பற்றி ஒங்களுக்கு வருத்தமோ கவலையே ஏதும் இருக்காது. உற்சாகமாய் இருப்பீங்க. அரசு ஊழியர்களுக்குக் கட்டளைகளை இடும்படியான அதிகாரம் மிக்க உயர் பதவிகள் கிடைக்கும்.
சிம்மம்
பிள்ளைங்க கிட்ட நல்ல உயர்வான முன்னேற்றங்களை எதிர்பார்க்கலாம். அதோடு மட்டுமில்லீங்க. உங்க கிட்ட அவங்களுக்கு ரெஸ்பெக்டும் அதிகமாகும். கடந்த நாட்களில் உங்களுக்கு இருந்துக்கிட்டிருந்த சோர்வு, பயம், கவலை ஆகிய நெகடிவ் சமாசாரங்கள் மெல்ல மெல்ல விலகி மன வானம் பளிச்சென்று ஆகியிருக்குமே? இந்த வாரம் பண விஷயத்தைப் பொறுத்தவரை திருப்திகரமான வாரமாக இருக்கும். வீட்டில் திருமண வைபவங்களை எதிர்பார்க்கலாம். ஆடம்பரச் செலவுகளை குறைத்தால் பொருளாதாரச் சிக்கல்களில் இருந்து மீளலாம். ஆனால் அதுக்கு ரொம்பவும் மெனக்கெட வேண்டியிருக்கும். மெனக்கெடுங்க. தப்பில்லை. போட்டி, பந்தயங்களில் வெற்றி கிடைக்கும். புதிய தொழில் முயற்சிகள் கவர்மென்ட் உதவியுடன் வெற்றி பெரும்.
சந்திராஷ்டமம் : ஏப்ரல் 24 முதல் ஏப்ரல் 26 வரை
சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாக இருக்க வேண்டும்.
கன்னி
இந்த வாரம் ஹாப்பியா இருப்பீங்க. மகான்களின் தரிசனத்தால் மனம் மகிழ்வதோடு, மனதில் அமைதியும் நிலவும். புத்திர பாக்கியம் ஏற்படும். புதிய தொழில் சான்ஸ்கள், லாட்டரி யோகங்கள், புண்ணியத்தல தரிசனங்கள் ஆகியவை ஏற்படுவதால் மனசுல அமைதியும் சாந்தமும் நிம்மதியும் நிலவும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது. சந்தர்ப்ப சூழ்நிலை அல்லது ஆபீஸ் காரணங்களுக்காகப் பிரிந்திருந்த கணவன் – மனைவி ஒன்று சேருவாங்க/ வீங்க. பிசினஸ்ல லாபம் நல்லபடியாகத்தான் இருக்கும். கடையை விரிவுபடுத்தவோ அல்லது வேறு இடத்துக்கு மாற்றவோ சாதகமான சூழ்நிலை இல்லை என்பதால் பொறுமை அவசியம். மாணவர்கள் தங்கள் கல்வியில் முழு கவனம் செலுத்துவீங்க. எனவே அதிக மதிப்பெண்கள் பெற இயலும்.
சந்திராஷ்டமம் : ஏப்ரல் 26 முதல் ஏப்ரல் 29 வரை
சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாக இருக்க வேண்டும்.
துலாம்
இந்த வாரம் சிறப்பான உடை அணிந்து மிடுக்காக உலா வருவீங்க சிலருக்கு உயர்ந்த மேக் வாகனங்கள் கிடைக்கும். குடும்ப சந்தோஷம் குறைவில்லாது நிறைந்திருக்கும். தம்பதிகளிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். பெரியவர்கள் ஆசியால் நீங்க எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வெற்றி அடையும். பிரபலமானவர்களின் ஆறுதலும், அன்பும் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்துல ஐ மீன் பிசினஸ் என்றாலும் சரி புரொஃபஷன் என்றாலும் சரி எதிர்பார்த்ததைவிடவும் விற்பனையும் லாபமும் கூடுதலாகக் கிடைக்கும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த விஷயங்கள்ளாம் அனுகூலமாக முடியும். சின்ன உற்சாகங்கள் உண்டு. வேலைக்குச் செல்லும் அன்பர்களுக்கு அலுவலகத்தில் பணிச் சுமை அதிகரிக்கும். அதற்கேற்ற ஆதாயமும் கிடைக்கும் என்பதால் உற்சாகமாகக் காணப்படுவீங்க.
சந்திராஷ்டமம் : ஏப்ரல் 29 முதல் மே மாதம் 1ம் தேதி வரை
சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாக இருக்க வேண்டும்.
விருச்சிகம்
குடும்பத்தை நிர்வகிக்கும் லேடீசுக்கு, தேவையான பணம் கிடைக்கும் என்பதால் பிரச்னை இருக்காது. ஆபீசில் கூடுதல் பொறுப்புகளும் அதற்கேற்ற சலுகைகளும் கெடைக்கும். இதுவரைக்கும் இருந்துக்கிட்டிருந்த உடல் உபாதைங்க நீங்கி, ஹெல்த் மேம்படும். வாழ்க்கைல நல்ல முன்னேற்றம் ஏற்படுவதற்கான திருப்புமுனை வாரமா இந்த வாரம் அமையும். பழை…..ய ஃப்ரெண்ட்ஸ் யாரையாச்சும் (அல்லது பலரைப்) பார்ப்பீங்க. அந்தக் கால சமாசாரங்களைப் பேசி ஹாப்பியா ஆவீங்க. புது விஷயம் ஏதாச்சும் கத்துக்க ஆரம்பிப்பீங்க. பணவரவு நல்லபடியா இருக்கும். ஆகவே இப்போதைக்குக் கடன் ஏதும் வாங்கிடாதீங்க. மத்தவங்க கிட்டப் பேசும்போது சற்று கவனம் தேவை. உறவினர்களாலும் நண்பர்களாலும் மனசுக்கு உற்சாகம் கெடைக்கும்.
தனுசு
அலுவலகத்தில் உங்க பணிகளில் கூடுதல் கவனம் செலுத்தி நல்ல பெயர் எடுத்துடுவீங்க. அது உங்க பாஸைத் திருப்திப் படுத்தும் அதன் ரிசல்ட் சீக்கிரத்துல உங்களுக்குத் தெரியும் பாருங்களேன். இப்போதைக்கு உடனடியாகப் பெரிய அளவுல சலுகைகள் எதையும் எதிர்பார்க்கமுடியாது. சிலருக்கு இட மாறுதல் கிடைப்பதற்கும்கூட சான்ஸ் உள்ளது. ஆபீஸ்ல உற்சாகமான சூழ்நிலை காணப்படும். பணிகளில் உற்சாகமாக ஈடுபடுவீங்க. உயர் அதிகாரிகள் உங்கள் ஆலோசனைகளுக்கு உரிய அங்கீகாரம் கொடுப்பாங்க. எதிர்பார்த்த பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்ற சலுகைகள் கிடைக்கும். உங்களுடைய கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்படும். எந்த வாக்குவாதத்துலயும் விவாத்துலயும்.. ஆர்க்யூமென்ட்லயும் கலந்துக்கவே கலந்துக்காதீங்க. நல்ல வேளை. ஆக்கப்பூர்வமா ஏதோ ஒரு விஷயம் செய்வீங்க.
மகரம்
பல கால பயம் நீங்கும். நீங்க பிசினஸ் செய்யறவங்களா? புதிய முயற்சிகள் வெற்றி பெறும். வாரத்தோட பிற்பகுதில சக வியாபாரிகளால் மறைமுகப் போட்டிகள் ஏற்படக்கூடும். பற்று வரவில் கவனம் தேவை. அதே சமயம் நல்ல தன்னம்பிக்கையோட செயல்படுவீங்க. அட என்னாயிடும் பார்த்துக்கலாம் என்ற மன நிலை இருக்கும். எனவே சக்ஸஸ்தான். புத்தக வெளியீடு அல்லது கல்வி சம்பந்தமான தொழில்களில் முன்னேற்றம் ஏற்படும். ஆதாயம் அதிகரிக்கும். அண்டை வீட்டார், நண்பர்கள் மற்றும் சகோதரரால் உங்களோட நீண்ட காலப் பிரச்சனை ஒன்றிற்கு ஒரு முடிவு வரும். வியாபாரிகளுக்கு வியாபாரம் ஏற்ற இறக்கமின்றி ஒரே சீராக இருக்கும். பேச்சில் அதிகக் கவனமா இருங்க. சோஷல் மீடியா நட்புகளை ஒரு அளவோட குறிப்பிட்ட எல்லைல நிறுத்திக்குங்க.
கும்பம்
சிலருக்குப் பயணங்களின்மூலம் புதிய நபர்கள் மற்றும் பிரபலமானவங்க அறிமுகம் கெடைக்கும். வியாபாரிகளுக்கு முதலீடுகள் அதிகரித்து இலாபமும் அதிகரிக்கும். ஆபீஸ் ஜாப் மற்றும் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். நண்பர்கள் அல்லது குடும்பத்தினர் கூட, சினிமா, டிராமா, மால் எல்லாம் போவீங்க. ரிலேடிவ்ஸ் உங்க கிட்ட மத்தவங்களைப் பத்திப் பேசும்போது சின்னதா ஒரு ஸ்மைலோட சும்மா பார்த்துக்கிட்டே இருங்க. தலையைக்கூட அசைக்க வேணாம். இன்னும் கேட்டால் இந்த வீக் யார் கிட்டயும் எதுவுமே பேசிடாதீங்க. பணவரவு கணிசமா உயரும். புது மாடர்ன் டிரஸ் மற்றும் ஆபரணங்கள் சேரும். மனசுல தன்னம்பிக்கை அதிகரிக்கும். எதையும் சாதிக்கவேண்டும் என்ற மன உறுதி ஏற்படும். எந்த விஷயத்துலயும் உங்க உற்சாகத்தைச் சோம்பல் வந்து தடுத்துடாமல் கவனமா இருங்க.
மீனம்
பழைய வாகனத்தை மாத்திப் புத்தம்புதுசா ஒரு வாகனம் வாங்குவீங்க. அது உங்க மனசுக்குப் பிடிச்சதா அமையும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். புரிதல் அதிகமாகும். பிகாஸ் மனசுவிட்டுப் பேச ஆரம்பிச்சிருப்பீங்க. குடும்பத்துல மகிழ்ச்சியும் நிம்மதியும் ஏற்படும். பிரிந்திருந்த தம்பதி ஒன்று சேருவாங்க. சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். சுபநிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீங்க. ஃபேமிலியோட போய் விருந்து விசேஷங்கள்ல என்ஜாய் செய்துட்டு வருவீங்க. உறவினர்களால் சின்ன சின்ன உதவி மட்டுமில்லீங்க.. அவங்களோட சப்போர்ட்டும்கூடக கிடைக்கும். ஆபீஸ்லஇது வரை இருந்து வந்த இறுக்கமான சூழ்நிலை மாறும். உங்கள் பணிகளில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பும்கூடக் கெடைக்கும். எதிலும் கவனமா இருங்க.