டெல்லி
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 2021 ஆம் ஆண்டு பா.ஜ.க. முன்னாள் எம்.பி.-யும், இந்திய அணியின் தற்போதைய தலைமை பயிற்சியாளருமான கவுதம் கம்பீருக்கு கொலை மிரட்டல்கள் வந்துன..
தற்;போது மீண்டும் கவுதம் கம்பீருக்கு இ-மெயில் மூலம் கொலை மிரட்டல் வந்துள்ளதாக டெல்லியில் உள்ள ராஜீந்தர் நகர் காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்துள்ளார்.
தனக்கு ஐ எஸ் ஐ எஸ் என்ற அமைப்பிடம் இருந்து கொலை மிரட்டல் வந்துள்ளதாக கம்பீர் புகார் அளித்துள்ளார்.
மேலும் தனது குடும்பத்தின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், எப்ஐஆர் பதிவு செய்ய வேண்டும் எனவும் புகாரில் தெரிவித்துள்ளார்.
Patrikai.com official YouTube Channel