துரை’

தெற்கு ரயில்வே திருநெல்வேலி – செங்கோட்டை பயணிகளின் ரயிலில் பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு செய்துள்ளது.

திருநெல்வேலி- செங்கோட்டை பயணிகள் ரயிலில் காலை, மாலை நேரங்களில் கூட்டம் அதிகமாக இருப்பதால் கூடுதல் பெட்டிகள் இணைக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். நேற்று மாலை 6.20 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து செங்கோட்டைக்கு புறப்பட்டு சென்ற பயணிகள் யிலில் ராபர்ட் புரூஸ் எம்.பி. பயணம் செய்து பயணிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.

அவரிடம் பயணிகள் தற்போது 14 பெட்டிகளுடன் இணைக்கப்படும் ரயிலை 20 பெட்டிகளாக இயக்க வேண்டும், என்றும்அதில் பெண்களுக்கு என்று 2 பெட்டிகள் ஒதுக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்.. னர் அவர், இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் மற்றும் ரெயில்வே அமைச்சரை சந்தித்து கூடுதல் பெட்டிகள் இணைக்க நடவடிக்கை மேற்கொள்வேன் என்று உறுதி அளித்தார்.

இன்று திருநெல்வேலி- செங்கோட்டை இடையே இயக்கப்படும் பயணிகள் ரயிலின் பெட்டிகள் எண்ணிக்கையை 12ல் இருந்து 16 ஆக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மதுரையில் நடந்த தெற்கு ரெயில்வே ஆலோசனைக் கூட்டத்தில் நெல்லை எம்.பி. ராபர்ட் ப்ரூஸ் முன்வைத்த கோரிக்கையை ஏற்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.