மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழாவையொட்டி,  கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நாளான,   மே 12ந்தேதி மதுரை மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

மதுரை சித்திரை திருவிழாவில் அடுத்த மாதம் 12-ந்தேதி அன்று கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருள்கிறார்.  அன்றைய தினம், மதுரை மாவட்ட மக்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த ஆண்டு சித்திரை திருவிழாவிழாவிற்கான அறிவிப்பை கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதன்படி சித்திரைத் திருவிழா மே 8 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை நடைபெறுகிறது . முக்கிய நிகழ்வான,  மே 12 ஆம் தேதி காலை 5.45 மணியிலிருந்து 6.10 மணிக்குள்ளாக சித்திரை திருவிழாவில் சிகர நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளுகிறார் என அழகர் கோவில் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

இதையடுத்து,   மதுரை மாவட்ட கலெக்டர் சங்கீதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், புகழ்பெற்ற மதுரை சித்திரை திருவிழாவில் அடுத்த மாதம் 12-ந்தேதி (திங்கட்கிழமை) அன்று கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருள்கிறார். அன்றைய தினம் மதுரை மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை விடப்பட்டு உள்ளது. இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் ஜூன் மாதம் 14-ந்தேதி (சனிக்கிழமை) விடுமுறை தினத்தை வேலை தினமாக ஈடுசெய்து கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

எனவே மே மாதம் 12-ந்தேதி அன்று மாவட்டத்தில் உள்ள கருவூலம், சார்நிலை கருவூலம் மற்றும் வங்கிகள் மற்றும் அவசர அலுவல்கள் குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்பட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மதுரை சித்திரை திருவிழா மே 8 ஆம் தேதி தொடக்கம் – முழு விவரம் – மாவட்ட ஆட்சியர் ஆலோசனை…