சென்னை:  ஏப்ரல் 25, 26 தேதிகளில் உதகையில் 4வது துணை வேந்தர்கள் மாநாடு நடைபெறும் என ஆளுநர் மாளிகை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே உச்சநீதிமன்றம், தமிழ்நாடு அரசின் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்த நிலையில், பல்கலைக்கழக  வேந்தர் மற்றும்  துணைவேந்தர் நியமனம் குறித்து மாநில முதல்வரே முடிவு எடுக்கலாம்.

இதையடுத்து,  தமிழ்நாட்டில் உள்ள 48 மத்திய, மாநில அரசுப் பல்கலைக்கழகங்கள், தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள், பல்வேறு துறைகளின் நிபுணர்களும் இந்த மாநாட்டில் பங்கேற்கவுள்ளனர். பல்கலைக்கழக வேந்தர் பொறுப்பிலிருந்து ஆளுநரை நீக்க வகை செய்யும் மசோதா சட்டமானதாக சமீபத்தில் தமிழ்நாடு அரசு அரசிதழ் வெளியிட்டது.

இதைத்தொடர்ந்து, முதலமைச்சர் ஸ்டாலின்,  கடந்த வாரம் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் கூட்டத்தை கூட்டி, ஆலோசனை நடத்தினார்.

இந்த நிலையில், இந்த நிலையில், 4வது ஆண்டாக ஏப். 25 முதல் 26-ஆம் தேதிகளில் மாநில பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாடு நடைபெறவுள்ள தாக ஆளுநர் மாளிகை அறிவித்துள்ளது. துணை வேந்தர்கள் மாநாட்டை குடியரசுத் துணைத் தலைவர் துவங்கி வைக்க உள்ளதாக ஆளுநர் மாளிகை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தமிழ்நாடு ஆளுநராக ஆர். என். ரவி 2021-ஆம் ஆண்டு செப்டம்பரில் நியமிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து பல்கலைக்கழகங்களின் வேந்தர் என்ற அடிப்படையில் 2022-முதல் துணைவேந்தர்கள் மாநாட்டை உதகையில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ரவி நடத்தி வந்தார்.

இந்நிலையில் ஆளுநர் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாட்டை கூட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.