சென்னை: கத்தோலிக்க திருச்சபை தலைவர் போப் பிரான்சிஸ் மறைவுக்காக தமிழ்நாடு சட்டசபையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

தமிழ்க சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே பட்ஜெட் மீதான விவாதங்கள் முடிவடைந்த நிலையில், தற்போது மானிய கோரிக்கை விவாதங்கள் நடைபெற்று வருகிறது.
இன்று காலை வழக்கமான நேரத்தில் பேரவை கூடியதும், சபாநாயகர் அப்பாவு போப் ஆண்டவர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தார். ஏற்கனவே போப் மறைவுக்கு இந்திய அரசு 3 நாளும், தமிழ்நாடு அரசு இரண்டு நாளும் துக்கம் அறிவித்துள்ள நிலையில், மறைந்த போப் பிரான்சிஸுக்கு தமிழக சட்டசபையில் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.
இரங்கலை வாசித்த சபாநாயகர் அப்பாவு, முற்போக்கு கொள்கையோடு பெரும்மாற்றங்களை முன்னெடுத்த ஆளுமை போப் பிரான்சிஸ் என புகழ்ந்தார். அதனை தொடர்ந்து சட்டசபையில் அனைத்து உறுப்பினர்களும் எழுந்து நின்று 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.