திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சித்ரா பவுர்ணமி நாளுக்கான கிரிவல நேரம் அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
உலகை ஆளும் எம்பெருமான் சிவன் வீற்றிரும் திருவண்ணாமலை கோயில் உலகப்புகழ் பெற்றது. , திருவண்ணாமலையில் அமைந்துள்ள அருணாச்சலேஸ்வரர் கோவில், பஞ்ச பூத தலங்களில் ஒன்றாகும். இது நெருப்பிற்கான தலம் ஆகும். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் சம்பந்தர், அப்பர், மாணிக்க வாசகர் ஆகியோரால் பாடப் பெற்ற புகழ்பெற்ற தலமாகும்.

இங்கு தினசரி பல ஆயிரம் பேர் கிரிவலம் வந்து அண்ணாமலையாரின் அருணாசியை பெற்று வரும் நிலையில், பவுர்ணமி நாட்களில் பல லட்சம் பேர் அண்ணாமலையாரை சுற்றி கிரிவலம் சென்று சிவனின் அருளாசி பெற்று வருகின்றனர். ஆனால், திருவண்ணாமையில் கிரிவலம் செல்வதற்கு வருடத்தின் 365 நாட்களும் ஏற்றதாகும். எந்த மாதத்தில், எந்த நாளில், எந்த நேரத்தில் வேண்டுமானாலும் கிரிவலம் செல்லலாம் என்றும், அனைத்து நாளுமே சிறந்ததுதான் என ஆன்மிக பெரியோர்கள் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில், மே 11-ம் தேதி சித்ரா பவுர்ணமி வருகிறது. அன்றைய தினம் வழக்கமாக கிரிவலம் பல லட்சம் பேரை தாண்டி, மேலும் பல லட்சம் பேர் வருவார்கள். இதையொட்டி, கோவில் நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் முன்னேற்பாடுகளை செய்து வருகிறது.
இதைத்தொடர்ந்து, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சித்ரா பவுர்ணமி நாளுக்கான கிரிவல நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கிரிவலம் செல்ல உகந்த நேரம், மே 11-ம் தேதி இரவு 8.47 முதல் மே 12-ம் தேதி இரவு 10.43 வரை என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சித்ரா பௌர்ணமி கிரிவலத்திற்காக 20 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
அண்ணாமலையார் திருக்கோயில் மற்றும் கிரிவலப் பாதையை உள்ளிட்ட இடங்களில் பக்தர்களுக்குத் தேவையான இடங்களில் போதுமான கழிவறைகளும் குடிநீர் வசதிகளும் ஏற்பாடு செய்து தரப்படும் எனவும் அனுமதி பெற்ற இடங்களில் மட்டுமே அன்னதானம் வழங்க வேண்டும் என்றும் முறையான தரமான உணவுகள் வழங்க வேண்டும் இல்லையேல் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஆட்சியர் தெரிய்வத்துள்ளார்.