ஸ்ரீநகர்’

காஷ்மீர் ப்ள்ளத்தாக்கில் நிலவி வரும் மொசமான வானிலையால ந்க்கு அனைத்து பள்ளிகளுக்கும்  விடுமுறை விடப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்க்ளாக ஜம்மு மற்றும் காஷ்மீரின் ரம்பன் மாவட்டத்தில் தீவிர மழைப்பொழிவு, மேகவெடிப்பு மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இதனால் வீடுகள் இடிந்து விழுந்ததில், 2 குழந்தைகள் உள்பட 3 பேர் பலியானார்கள்.

மேகும் வீடுகள், ஓட்டல்கள் ஆகியவை சேதமடைந்தன. பல்வேறு பகுதிகளில் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டது.  இந்நிலையில், காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

காஷ்மீரின் கல்வி அமைச்சர் சகினா இதூ, எக்ஸ் தளத்தில் வெளியிட்டு உள்ள செய்தியில், தொடர்ந்து கடுமையான வானிலை சூழல்களால் 21-ந்தேதி (இன்று) ஒரு நாள் அனைத்து பள்ளிகளும் மூடப்படுகின்றன என பதிவிட்டு உள்ளார்.

பள்ளி மாணவர்கள் அனைவரின் பாதுகாப்பு மற்றும் நலனை உறுதி செய்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.