சென்னை: இன்றுமுதல் தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் வெப்பம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்துள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36 முதல் 37 டிகிரி செல்சியஸாக இருக்கும் என்றும் கணித்துள்ளது.
அதே வேளையில் சென்னை புறநகர்ப் பகுதிகள் மற்றும் பல மாவட்டங்களின் பகல் வெப்பநிலை படிப்படியாக உயரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கோடை காலம் தொடங்கி வெயில் கொளுத்தி வந்த நிலையில், கடந்த சில நாட்களில் அவ்வப்போது கோடை மழை பெய்து மக்களிடையே வெப்பத்தின் தாக்கத்தை குறைந்து வந்தது. இந்த நிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பகல் வெப்பநிலை இன்று (ஏப்.19) முதல் படிப்படியாக உயரும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. வரும் நாட்களில் மழைக்கான வாய்ப்பு மிகக் குறைவு என்றும் வெப்பநிலை படிப்படியாக 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என்று இந்திய வானிலை முன்னறிவிப்பு மைய இயக்குநர் செந்தாமரை கண்ணன் தெரிவித்து உள்ளார்.
நகரில் வெப்பநிலை 36 முதல் 37 டிகிரி செல்சியஸாக இருக்கும் என்று கணித்துள்ள வானிலை ஆய்வு மையம், மாநிலத்தின் ஒரு சில பகுதியில் ஈரப்பதத்துடன் வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் உயரக்கூடும் என்றும் எச்சரித்துள்ளது. மேலும், நகரின் வெப்பநிலை கடற்காற்று வரும் நேரத்தைப் பொறுத்தது. முற்பகலுக்குள் நிலப்பகுதிக்குள் நுழைந்தால், அதிகபட்ச வெப்பநிலை சாதாரணமாக இருக்கும். தாமதமாகி பிற்பகலில் வந்தால், அதற்குள் வெப்பநிலை அதிகரித்திருக்கும்” என்று அவர் கூறினார். ஏப்ரல் மாதத்தில் நகரின் சராசரி அதிகபட்ச வெப்பநிலை 34.7 டிகிரி செல்சியஸ் ஆகும்.
இன்று (சனிக்கிழமை) சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும், வெப்பநிலையை பொறுத்தவரை அதிகபட்சமாக 36 முதல் 37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச 27 முதல் 28 டிகிரி செல்சியஸ் வரை இருக்கக் கூடும் என்றும் வானிலை ஆய்வும் மையம் கணிதத்துள்ளது.
வெள்ளிக்கிழமை, நுங்கம்பாக்கம் மற்றும் மீனம்பாக்கத்தில் 34.3 டிகிரி செல்சியஸ் மற்றும் 35.8 டிகிரி செல்சியஸ், இயல்பை விட 0.5 டிகிரி செல்சியஸ் மற்றும் 0.2 டிகிரி செல்சியஸ் குறைவாக பதிவாகியுள்ளது என்று தெரிவித்துள்ளார்
[youtube-feed feed=1]