டெல்லி: ஜேஇஇ இரண்டாம் கட்ட முதன்மை தேர்வின் செசன்2 தேர்வு முடிவுகள் இன்று (ஏப்ரல் 19) வெளியாகும் என்று தேசிய தேர்வு முகமை (NTA) தெரிவித்துள்ளது.
ஜேஇஇ இரண்டாம் கட்ட முதன்மை தேர்வு முடிவுகள் நாளை வெளியாகிறது என்று தேசிய தேர்வு முகமை (NTA) தெரிவித்துள்ளது. முன்னதாக இத்தேர்வுக்கான இறுதி விடைத்தாள் குறிப்பை தேர்வர்கள் இன்று மதியம் முதல் பகிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் என்டிஏ கூறியுள்ளது.

நம் நாட்டில் உள்ள ஐஐடி, என்ஐடி போன்ற மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் பி.இ., பி.டெக்., உள்ளிட்ட இளநிலை பொறியியல் பட்டப்படிப்புகளில் சேர ஜேஇஇ எனப்படும் (Joint Entrance Examination) தேசிய அளவிலான நுழைவுத் தேர்வு ஆண்டுதோறும் இரண்டு கட்டங்களாக நடத்தப்படுகிறது. அதன்படி, 2025-26 ஆம் ஆண்டுக்கான ஜேஇஇ முதல்கட்ட முதன்மைத் தேர்வு கடந்த ஜனவரி 22 முதல் 30-ஆம் தேதி வரை நடத்தப்பட்டது.
இந்த தேர்வானது, தமிழ், தெலுங்கு, ஆங்கிலம்,அசாமி, பெங்காலி, குஜராத்தி, இந்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, ஒடியா, பஞ்சாபி, உருது ஆகிய 13 மொழிகளில் நடைபெற்றது. இந்த தேர்வை மொத்தம் 12.58 லட்சம் பேர் எழுதிய நிலையில், தேர்வு முடிவுகள் கடந்த பிப்ரவரி 11-ம் தேதி வெளியானது.
இதனைத் தொடர்ந்து ஜேஇஇ இரண்டாம்கட்ட முதன்மைத் தேர்வு கடந்த ஏப்ரல் 2 முதல் 8-ம் தேதி வரை நடைபெற்றது. இத்தேர்வு முடிவுகள் இன்று (ஏப்ரல் 19) வெளியிடப்படும் என்று தேசியத் தேர்வு முகமை இன்று அறிவித்துள்ளது.
தேர்வர்கள், JEE முதன்மை தேர்வு முடிவுகளை சரிபார்க்க அதன் அதிகாரப்பூர்வ வலைத்தளம் jeemain.nta.nic.in. JEE முதன்மை தேர்வு 2025 அமர்வு 2 முடிவுகளை NTA JEE மேம்பட்ட தேர்வு, அகில இந்திய தரவரிசை பெற்றவர்கள் மற்றும் மாநில வாரியாக முதலிடம் பிடித்தவர்களுக்கான கட்-ஆஃப் மதிப்பெண்களுடன் அறிவிக்கும் என குறிப்பிட்டுள்ளது.
முன்னதாக, இந்தத் தேர்வுக்கான இறுதி விடைத்தாள் குறிப்பை (Final Answer Key) தேர்வர்கள் நேற்று மதியம் 2 மணி முதல் https://jeemain.nta.nic.in/information-bulletin என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் என்டிஏ தெரிவித்துள்ளது.