சென்னை

விரைவில் சென்னை விமான முனையத்தில் இருந்து பேருந்து சேவை  தொடங்க உள்ளது.

விமான நிலைய முனையத்தில் இருந்து பஸ் சேவையை பெற, உடைமைகளை சுமந்துகொண்டு ஜிஎஸ்டி சாலையில் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை நடந்து செல்ல வேண்டும். குறிப்பாக கோடை வெயில், கொட்டும் மழைக்காலத்தில் பொதுமக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகின்றனர்

விரைவில் சென்னை சர்வதேசவிமான நிலையம் உள்ளே இருந்து மாநகர போக்குவரத்து பேருந்து சேவை தொடங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  அதாவது சென்னை விமான நிலைய வளாகத்திற்குள்ளேயே சென்று, பயணிகளை ஏற்றவும், இறக்கவும் அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது  இதனால், விமான நிலையங்களுக்கு செல்லும் பொதுமக்கள் நீண்டகாலமாக எதிர்கொள்ளும் பிரச்னைக்கு தீர்வு காணப்பட உள்ளது.

.சென்னை விமான நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் வரையும், ரேடியல் சாலை, சோழிங்க நல்லூர் வழியாக அக்கரை வரையும் பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாநகரபோக்குவரத்து கழகம், இதற்கான கோரிக்கையை விமான அமைச்சகத்திடம் முன்வைத்துள்ளது. இதற்கான அனுமதி கிடைத்தவுடன் அரசு பஸ்கள் விரைவில் விமான நிலைய வளாகத்திற்குள் இயக்கப்படும்