திருச்செந்தூர்
திடீரென திருச்செந்தூரில் கடல் உள் வாங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஒவ்வொரு மாதமும் வழக்கமாக அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்கள், முந்திய நாட்கள், பிந்திய நாட்களில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கும், அய்யா வைகுண்டர் அவதாரபதிக்கும் இடைப்பட்ட கடல் பகுதியில் காலையில் கடல்நீர் உள்வாங்குவதும், பின்னர் மாலையில் இயல்புநிலைக்கு திரும்புவதும் வழக்கமாக நடைபெற்று வருகிறது.
இன்று, திருச்செந்தூரில் கடல் நீர் திடீரென உள்வாங்க தொடங்கியது. சுமார் 100 அடி தூரம் கடல் நீர் உள்வாங்கியதால் பாசி படர்ந்த பாறைகள் வெளியே தெரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆயினும் கோவிலுக்கு வந்த பக்தர்கள் எந்தவித அச்சமும் இன்றி பாறையில் நடந்து சென்று ஆச்சரியத்துடன் பார்த்து ரசித்து வழக்கம்போல் கடலில் புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர்.