சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று சுற்றுலா மற்றும் இந்து சமய அறநிலையத்துறை மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற உள்ளது. இதைத்தொடர்ந்து துறை சார்ந்த அமைச்சர்கள் பல்வேறு அறிவிப்புகளை வெளியிடுவார்கள்.

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. மார்ச் மாதம் 14ந்தேதி அன்று தொடங்கிய பட்ஜெட் கூட்டத்தொடர், பட்ஜெட் மீதான விவாதங்கள் முடிவடைந்து, தற்போது மானிய கோரிக்கைகள் மீதான விவாவதங்கள் நடைபெற்று நிறைவேற்றப்பட்டு வருகிறது.
இன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில், கேள்வி நேரம் முடிந்ததும், சுற்றுலா – கலை மற்றும் பண்பாடு, இந்து சமய அறநிலையத்துறை ஆகியவற்றின் மானியக் கோரிக்கை மீது விவாதம், அமைச்சர்கள் பதிலுரை, வாக்கெடுப்பு ஆகியவை நடக்க உள்ளன. இதைத்தொடர்ந்து, சட்டமன்ற அலுவல்கள் இன்று பிற்பகலில் நிறைவடைகிறது.