சென்னை: கலைஞர் கருணாநிதி பிறந்த நாள் செம்மொழி நாளாக கொண்டாடப்படும் என பேரவையில் அமைச்சர் சாமிநாதன் அறிவித்தார். மேலும், அரசிதழில் பெயர் திருத்தம், பெயர் மாற்றம் வெளியிடுதலுக்கான இணைய வழி சேவை தொடங்கப்படும் என்றும் கூறினார்.
ரூ.41 இலட்சத்தில் அச்சு மற்றும் காட்சி ஊடகச் செய்தியாளர்கள் அறைகளுக்கு கணினி & அதிவேக இணையதள வசதிகள் செய்து தரப்படும் என்றும், சென்னையில் இதழியல் மற்றும் ஊடகவியல் கல்வி நிறுவனம் (Institute of Journalism and Media Studies) அமைக்கப்படும் என்றும் கூறினார்.

தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் மாதம் 14ந்தேதி அன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. தற்போது மானிய கோரிக்கைகள் மீதான விவாவதங்கள் நடைபெற்று நிறைவேற்றப்பட்டு வருகிறது.
இன்று செய்தித்துறை மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்றது.
அப்போது, இந்த ஆண்டு முதல் கலைஞர் பிறந்த நாள் செம்மொழி நாளாக கொண்டாடப்படும்,
அதுபோல, கோவையில் அமைக்கப்படும் செம்மொழிப்பூங்காவில் தமிழ்த்தாய் உருவச் சிலை நிறுவப்படும் என்றும்,
ரூ. 50 இலட்சத்தில் அய்யன் திருவள்ளுவருக்கு சிலை அமைக்கப்படும்.
ரூ.3 கோடியில் “கலைஞர் திரைக் கருவூலம்” அமைக்கப்படும்
ரூ.1 கோடியில் திரு.வி.க. நினைவரங்கம், மார்பளவு வெண்கலச் சிலை
டெல்லி ஜே.என்.யூ. பல்கலையில் பன்னோக்கு கலையரங்கம் அருகில் திருவள்ளுவருக்கு சிலை நிறுவப்படும்,
ரூ.3 கோடியில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களுக்கு திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்படும்.
மதுரவாயல் பகுதியில் உள்ள திரு.வி.க. நூலகம் புதுப்பிக்கப்படும்
காந்தி மண்டப வளாகத்திலுள்ள சுதந்திரப் போராட்டத் தியாகிகள் மண்டபம் & தமிழ்மொழித் தியாகிகள் மண்டபங்கள் புனரமைக்கப்பட்டு, தியாகிகளின் புகைப்படங்கள் நவீன தொழில்நுட்பத்தில் எண்மியமாக்கப்படும்.
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் ஐந்தாண்டு ஒருங்கிணைந்த தமிழ் முதுகலைப் பட்ட வகுப்பில் பயிலும் மாணவர்களுக்குத் திங்கள்தோறும் கல்வி உதவித் தொகையும் தங்கிப் பயிலும் மாணவர்களுக்கு உணவு வழங்கவும் நிதி ஒதுக்கீடு
ரூ.20 இலட்சத்தில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் ‘தொல்காப்பியர் சுழலரங்கம்: மாநிலம் தழுவிய வெள்ளி வட்டம்’ சிறப்புப்பொழிவு.
ரூ.42 இலட்சத்தில் ‘அறிஞர்களின் அவையம்’
ரூ.50 இலட்சத்தில் சங்க காலப் புலவர் குறமகள் இளவெயினிக்கு மதுரையில் திருவுருவச் சிலை !
தமிழறிஞர்கள் பதின்மரின் நூல்கள் நாட்டுடைமை செய்யப்படும்.

ரூ.3.80 கோடியில் கண்காணிப்புக் கேமிராக்கள் (CCTV) & ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையங்கள்
ரூ.5 கோடியில் வேலூர் அண்ணா கலையரங்கம் அதிநவீன அரங்கமாக புனரமைப்பு.
ரூ.14.28 இலட்சத்தில் சென்னை அரசு மைய அச்சகம், அரசு கிளை அச்சகம்.
ரூ. 47.50 இலட்சத்தில் சென்னை அரசு மைய அச்சகத்திற்கு Variable Data Printer (VDP) Drop on Demand (DOD) Piezo Inkjet System CSPL 34 AE Print Head கொள்முதல்
ரூ.31.80 இலட்சத்தில் சென்னை அரசு மைய அச்சகத்திற்கு Orient 2 HI-Tower-1 வெப் ஆப்செட் இயந்திரத்திற்கு Sheeter Unit கொள்முதல்
அரசிதழில் பெயர் திருத்தம், பெயர் மாற்றம் வெளியிடுதலுக்கான இணைய வழி சேவை
அச்சிடும் துறைக்கான நிறுவன வள திட்டமிடல் மென்பொருள் (ERP for Printing Industry)
அதிநவீன அச்சு தொழில்நுட்பங்கள் குறித்து திறன் மேம்பாட்டுப் பயிற்சி
ரூ.41 இலட்சத்தில் அச்சு மற்றும் காட்சி ஊடகச் செய்தியாளர்கள் அறைகளுக்கு கணினி & அதிவேக இணையதள வசதிகள்
சென்னையில் இதழியல் மற்றும் ஊடகவியல் கல்வி நிறுவனம் (Institute of Journalism and Media Studies) அமைக்கப்படும்.
ரூ.10 கோடியில் அதிநவீன தொழில்நுட்பக் கருவிகள் & உபகரணங்கள் கொள்முதல்
ரூ.17.85 கோடியில் 28 மாவட்டங்களில் மின்சுவர்கள் (Digital Wall)
ரூ.50 இலட்சத்தில் குமரிக் கோமேதகம் ஆர்.பொன்னப்ப நாடார் அவர்களுக்கு திருவுருவச்சிலை.
தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் நூற்றாண்டு விழா அரசு விழாவாகக் கொண்டாடப்படும்.
இசை முரசு நாகூர் இ.எம். அனிபா அவர்களின் நூற்றாண்டு விழா அரசு விழாவாகக் கொண்டாடப்படும்.
கவிக்கோ அப்துல் ரகுமான் பிறந்த நாளான நவம்பர் 9-ஆம் நாளினை தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் மாவட்ட அளவில் அரசு விழாவாகக் கொண்டாடப்படும்.
அறிவியல் தமிழறிஞர் மணவை முஸ்தபாவின் பிறந்த நாளான ஜூன் 15-ஆம் நாளினை தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் மாவட்ட அளவில் அரசு விழாவாகக் கொண்டாடப்படும்.
ரூ.50 இலட்சத்தில் திரு.க.ரா. ஜமதக்னி அவர்களுக்கு நினைவுத்தூண்
தமிழ் வளர்ச்சிக் கழகம் தொய்வின்றி செயற்பட ரூ.2 கோடி வைப்புத் தொகை வழங்கப்படும்.
உதவித்தொகை பெறும் அகவை முதிர்ந்த தமிழறிஞர்களின் எண்ணிக்கை 150 ஆக உயர்வு தமிழறிஞர்கள், எல்லைக் காவலர்கள், அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை உயர்வு
2025-ஆம் ஆண்டிற்கான சிறந்த திருநங்கை விருதினை திருநங்கை ரேவதி மற்றும் திருநங்கை பொன்னி ஆகியோருக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் வழங்கினார்.
உள்பட பல்வேறு அறிவிப்புகள் வெளியானது.