நெல்லை:  நெல்லை மாவட்டத்தில்,  ஒரே வகுப்பில் படிக்கும்,  பள்ளி மாணவனை சக மாணவன் அரிவாளால் வெட்டியது மட்டுமின்றி, அதை  தடுக்க சென்ற ஆசிரியருக்கும் வெட்டு விழுந்தது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே நெல்லை மாவட்டத்தின் பல பள்ளிகளில் சாதிய வேறுகள் வேரூன்றி இருக்கும் நிலையில், அவ்வப்போது தாக்குதல்களும் நடைபெற்று வருகிறது. இதை தடுத்து சாதிய வேற்றுமையை களைய நடவடிக்கை எடுப்பதாக திமுக அரசு கூறி வந்தாலும், அரசின் நடவடிக்கைகள் ஒரு தரப்புக்கு ஆதரவாகவே இருப்பதால், மற்றொரு தரப்பினர் அதிருப்தி அடைந்து சாதிய வன்முறைகளில் ஈடுபட்டு வருகின்றன. இது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் 2020க்கு பிறகு தலித்கள் மீதான தாக்குதல் 50 சதவிகிதம் உயர்ந்துள்ளதாக மாநில ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில்,  திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை அருகேயுள்ள ஒரு தனியார் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படிக்கும் இரு மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவருக்கு அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. ஒரு மாணவன் மற்றொரு மாணவனை அரிவாளால் வெட்டியதில் படுகாயமடைந்த மாணவன், தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மாணவன் நலமுடன் இருப்பதாகவும் அரிவாள் வெட்டு சம்பவம் குறித்து விரிவான விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் காவல்துறை ஆணையாளர் தகவல் தெரிவித்துள்ளார்.

பள்ளி வளாகத்தை சுற்றி காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது. காவல் துறையினரின் முதல் கட்ட விசாரணையில் அரிவாள் வெட்டு வாங்கின மாணவர் இடம் சக மாணவன் பென்சில் கேட்டதாகவும் அதைக் கொடுக்க மறுத்ததால் ஆத்திரத்தில் அரிவாளால் வெட்டியதா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் அந்த மாணவன் அரிவாளைக்கொண்டு சக மாணவனை வெட்டும்போது, அதை தடுக்க முயன்ற வகுப்பு  ஆசிரியருக்கும் கையில் வெட்டு விழுந்து உள்ளது. அவரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவம் அப்பள்ளி மாணவவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 8ம் வகுப்பு மாணவன் சக மாணவனை வெட்டும் அளவுக்கு நடந்த சம்பவம் என்ன என்பது குறித்து விசாரிக்க வேண்டும் என்றும், மாணவன் பள்ளிக்குள் எப்படி அரிவாளைக் கொண்டு வந்தான் என்று காவல் துறையினர் விசாரணை நடத்த வேண்டும் என்றும் சமுக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த   சம்பவம் நெல்லை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நெல்லையில் பயங்கரம்: ஓய்வுபெற்ற காவல் அதிகாரி பட்டப்பகலில் வெட்டிக்கொலை – அன்புமணி கடும் விமர்சனம்…

கொலை நகரமாக மாறுகிறதா நெல்லை? திருநெல்வேலி மாவட்ட காவல்துறை மறுப்பு – விளக்கம்