சென்னை: நகர்ப்புற உள்ளாட்சியில் சாலை அமைக்க நிதி ஒதுக்கீடு, எச்ஐவி பாதிப்பு குழந்தைகளுக்கு உதவித்தொகை, 36 ரயில்வே பாலப்பணிகள் நிறைவு பெற்றுள்ளது  என்றும், சென்னை பேசின்பிரிட்ஜ் பாலம் விரிவாக்கம் குறித்து ஆய்வு செய்யப்படும்  என  பேரவையில் அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக,  சட்டப்பேரவை வளாகத்தில் சபாநாயகர் அப்பாவு உடன் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தித்தார். பாஜகவின் புதிய மாநிலத் தலைவராக பொறுப்பேற்ற பின்னர் சபாநாயகரை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

அதுபோல, தமிழ்நாடு சட்டப்பேரவையில் செய்தி, விளம்பரத் துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெறவுள்ள நிலையில், சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் அமைச்சர் சாமிநாதன் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

இதையடுத்து,  சட்டப்பேரவையின் இன்றைய அமர்வில் கேள்வி நேரத்தின்போது, உறுப்பினர்களின் பல்வேறு கேள்விகளுக்கு துறைசார்ந்த அமைச்சர்கள் பதவில் கூறினர்.  அதன் விவரம் வருமாறு:-

சென்னை பேசின் பிரிட்ஜ் பாலத்தை விரிவு படுத்தலாமா அல்லது வேறு பாலம் அமைக்கலாமா என்பது குறித்து தொழில்நுட்ப வல்லுநர்களை கொண்டு ஆய்வு மேற்கொண்டு இந்தாண்டே நடவடிக்கை எடுக்கப்படும் என பேரவையில் பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.டி.சேகர். எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் எ.வ.வேலு பதில் அளித்துள்ளார்.

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு நிலுவையில் இருந்த 71 ரயில்வே பாலங்களில் 36 பாலப்பணிகள் நிறைவு பெற்றுள்ளதாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

சென்னை பேசின் பிரிட்ஜ் பாலத்தை விரிவு படுத்தலாமா அல்லது வேறு பாலம் அமைக்கலாமா என்பது குறித்து தொழில்நுட்ப வல்லுநர்களை கொண்டு ஆய்வு மேற்கொண்டு இந்தாண்டே நடவடிக்கை எடுக்கப்படும் என பேரவையில் பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.டி.சேகர். எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் எ.வ.வேலு பதில் அளித்தார்.

செங்கத்தை நகராட்சியாக அறிவித்த நிலையில் சாலைகள் சீரமைத்து கால்வாய் அமைக்கப்படுமா என உறுப்பினர் கிரி கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் கூறிய அமைச்சர் நேரு,  நகர்ப்புற உள்ளாட்சியில் சாலை அமைக்க ரூ.3,750 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

பேரவையில் கடையநல்லூர் உறுப்பினர் கிருஷ்ணமுரளி எச்ஐவி பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நிதி வழங்கப்படுமா என எழுப்பிய  கேள்விக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியம் பதில் அளித்தார். அப்போது,   எச்ஐவி நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மாத உதவித் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியம் என கூறினார்.